பாகிஸ்தானிடம் கஸ்னாவி….நம்மிடம் ?

பாகிஸ்தானிடம் கஸ்னாவி….நம்மிடம் ?

கஸ்னாவி குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.பலிஸ்டிக் ஏவுகணைகள் என்றால் என்ன? நாம் ஒரு கல்லை எடுத்து 45 டிகிரி என்ற அளவில் எறிந்தால் வருமே “பாதை” அது தான்..அதாவது தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை அதன் தூரத்திற்கு ஏற்ப சென்று விழும்.ஏவுகணை செல்லும் வழியில் அதன் பாதையை மாற்ற இயலாறு.அதற்கு வேகம் ஒரு காரணம் மற்றும் இந்த வகை ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது என்பது கடினமான பணி தான்.

கஸ்னாவி 290கிமீ வரை சென்று தாக்கும் எனும் போது பாகிஸ்தானுக்கு மிக தேவையான ஒன்று தான்.ஏனெனில் அவர்கள் எல்லைக்கு மிக அருகே வந்து முக்கிய இந்திய நிலைகளை தாக்கலாம்.இதற்காக தான் இந்தியாவை மிரட்டும் பொருட்டு மற்ற ஏவுகணை விட கஸ்னாவியை ஏவி பரிசோதித்துள்ளது.மேலும் கஸ்னாவி அணு தவிர மற்ற சில வெடிப்பொருள்களையும் சுமந்து பறக்கும் என பாக் கூறுகிறது.

சஹீன் போன்ற அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதித்தால் உலக நாடுகளின் கண்டனங்களை ஏற்க வேண்டியிருக்கும் என்ற காரணத்தால் தான் கஸ்னாவியை பரிசோதித்துள்ளது.

290கிமீ வரை செல்லக்கூடியது.நமது புத்தகத்தில் படித்திருப்போமே முகமது கஜினி அவரது பெயர் தான் இந்த ஏவுகணைக்கு சூட்டியுள்ளது.

பெனாசீர் புட்டோ காலத்தில் இருந்தே சீனாவின் டொங் பெங் ரக ஏவுகணையை பெற பாக் முயற்சித்தது.ஆனால் ஏவுகணை தொழில்நுட்ப பரிமாற்ற கட்டுபடுத்தி அமைப்பு இதை செய்யவிடவில்லை என கூறி தானே மேம்படுத்த முயற்சி செய்து எப்படியோ சீனாவின் உதவியை பெற்று (பெயிண்டு அடித்து) கஸ்னாவியை மேம்படுத்தியது என கூறலாம்.

இந்த ஏவுகணைக்கு இந்தியாவின் பதில்

பிரித்வி டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணை

பிரித்வி 1    150கிமீ

பிரித்வி 2    250-350கிமீ

பிரித்வி 3     350-600கிமீ

குறைதூர பலிஸ்டிக் ஏவுகணைகள் ஒரு போரின் போது குறைதூர முக்கிய இராணுவ இலக்கை தாக்க வல்லது.அதன் தூரம் அதிகப்பட்சமாக 300-350கிமீ இருத்தல் வேண்டும்.நமது பிரித்வி 1 மற்றும் 2 இந்தியாவிற்கு அத்தகைய பலத்தை கொடுக்கும்.

அணு மற்றுமல்லாமல் மற்ற வெடிபொருள்களையும் ஏவுகணையில் இணைக்கலாம்.

 பாக் தாக்கினால் ஒன்றுக்கு பத்து பதிலடி உறுதி..

Leave a Reply

Your email address will not be published.