“ஸ்டிரைக் கார்ப்ஸ்” படைப் பிரிவைச் சந்தித்த பாக் இராணுவத் தளபதி

“ஸ்டிரைக் கார்ப்ஸ்” படைப் பிரிவைச் சந்தித்த பாக் இராணுவத் தளபதி

பாக் இராணுவத்தின் முன்னனி ஸ்டிரைக் ( தாக்கும்) படைப் பிரிவைச் சந்தித்துள்ள அந்நாட்டு தளபதி பாஜ்வா போருக்கான தயார் நிலை குறித்து கேட்டறிந்தார்.

வீரர்களை உற்சாகப்படுத்திய தளபதி பாஜ்வா போரில் ஸ்டிரைக் கார்ப்ஸ் படையின் முக்கிய பணி குறித்து பேசியுள்ளார்.

இதற்கு முன்னதாக நேற்று நள்ளிரவு பாக் படை தனது குறைதூரம் சென்று தாக்கும் கஸ்னாவி பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது.இதற்கு இந்தியா கண்டனமும் தெரிவித்திருந்தது.

உலக அளவிலான பேச்சுவார்த்தைகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் தற்போது இராணுவ நடவடிக்கைகளின் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது.

வரும் அக்டோபரில் கடைசி போர் நடக்கும் என இம்ரான் கான் ரயில்வே அமைச்சர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.