சீனா ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சளைத்ததல்ல என கிழக்கு பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் எம்.எம்.நாரவனே கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் இனி 1962 ஆம் ஆண்டில் இருந்த ராணுவம் அல்ல. வரலாற்றை மறந்து விடாதீர்கள் என சீனா சொன்னால் அவர்களுக்கும் இதே விஷயத்தை சொல்ல வேண்டும். 1962 ம் ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட தோல்வியை கருப்பு அடையாளமாக பார்க்க வில்லை. அந்த நேரத்தில் நமது ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் நன்றாக போராடின. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்தன என்றார்.
மேலும் அவர் கூறுகையில் டோக்லாம் பகுதியில் சீனா திடீர் என ஆக்கிரமிப்பு செய்தது. அப்படி செய்தால் நமது ராணுவம் பின் வாங்கி விடும் என நினைத்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக எந்த ஒரு அச்சுறுத்தலையும் இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது என்பதை காட்டியது இவ்வாறு அவர் கூறினார்.
- Dinamalar