பாகிஸ்தான் உளவாளி கைது; இந்திய ராணுவ நிலைகள் குறித்த முக்கியமான ஆவணங்கள் பறிமுதல்

பாகிஸ்தான் உளவாளி அலி முர்தாஸாவை அம்பாலா போலீஸ் கைது செய்துள்ளது. அவனிடம் இருந்து முக்கியமான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது

ராஜஸ்தான் மாநிலம் பர்மெருக்குள் சுற்றுலா விசா மூலம் நுழைந்த 32 வயதாகும் பாகிஸ்தான் உளவாளி முர்தாஸா, விசா விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளான். பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. உளவாளியான அவன் அம்பாலாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். 

அவனுடைய நகர்வு குறித்து ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பை மேற்கொள்ளும் ராணுவ உளவுப்பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில் அம்பாலா போலீஸ் கைது செய்துள்ளது. அவனிடமிருந்து இந்திய ராணுவ நிலைகள் குறித்த முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 7 முறை இந்தியாவிற்குள் சுற்றுலா விசாவில் வந்து உளவு பணியை மேற்கொண்டுள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published.