தற்போதைய நான்காம் தலைமுறை விமானங்களுக்கு இணையானதா நம் தேஜஸ் ?

தற்போதைய நான்காம் தலைமுறை விமானங்களுக்கு இணையானதா நம் தேஜஸ் ?

தற்போதயை நான்காம் தலைமுறை விமானங்களுக்கு இணையான திறன் கொண்ட தேஜஸ் விமான வகை 2025 வாக்கில் தான் இந்திய விமானப்படைக்கு கிடைக்க உள்ளது.

“தேஜஸ்” இந்தியாவின் சொந்த தயாரிப்பு விமானமான இது நம் விமானப்படையில் உள்ள பழைய மிக்-21 விமானங்களுக்கு மாற்றாக கடந்த நாற்பது ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கண்ணுக்கு எட்டியதற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன்,வானத்தில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் திறன் மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பி நெடுந்தூரம் செல்லும் திறன் போன்ற காரணங்களால் தேஜஸ் பலபணி போர் விமானம் என்ற சான்றிதழ் இந்த வருட ஆரம்பத்தில் தான் கிடைத்தது.அதாவது  Final Operational Clearance (FOC) கிடைத்தது.

எனினும் மற்ற நான்காம் தலைமுறை விமானங்களை ஒப்படும் போது தேஜசின் திறன் குறைவாக தான் உள்ளது.இந்த தேஜசின் உற்பத்தி வேகமும் குறைவாக தான் உள்ளது.வான் பாதுகாப்பிற்காக விமானப்படை மேலதிக தேஜஸ் விமானங்களை விரைவாக வேண்டிவருகிறது.

தற்போது Mk 1ஏ மற்றும்  LCA-Mk 2 மேம்படுத்தப்பட்டு வருகிறது.இது தான் தேஜஸ் விமான வரிசையில் நவீன வகை.

LCA Mk 1ஏ மேம்படுத்தப்பட்ட  serviceability, faster weapon loading time, enhanced survivability, bettter electronic warfare suit மற்றும் AESA radar உடன் வரும்.

அதே போல் LCA Mk 2 பெரிய விமானமாக வரும்.அதில் அதிசக்தியுடைய GE 414 என்ஜின் பொருத்தப்படும்.

தற்போது 40 Mk 1 மற்றும் 83 Mk1ஏ ஆர்டரில் உள்ளது.மார்க்1ஏ 2022ல் பறக்க தொடங்கும்.அதன் பிறகே மார்க் 2 வரும்.

Leave a Reply

Your email address will not be published.