சர்வதேச கவனத்தைப் பெறுவதற்காக பாக். பொய் பிரச்சாரம் – இந்திய ராணுவம்

எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

இது முற்றிலும் தவறான பிரச்சாரம் என்றும் பாகிஸ்தான் தனது பிரச்சார பீரங்கிகளை பொய்ப் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய ராணுவத்தின் ஒரு வீரர் மட்டும் உயிரிழந்ததாகவும் நான்கு வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கவனத்தை திருப்புவதற்காகவே பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும் பொய்ப் பிரச்சாரத்தை ஏவி விடுவதாகவும் தெரிவித்த இந்திய ராணுவம், ஒரு போதும் உயிரிழப்புகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் நேரிட்டதில்லை என்று தெரிவித்துள்ளது.

தனது வீரர்களை இழந்தபோதும் மூடி மறைப்பது பாகிஸ்தானுக்கு வழக்கம் என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Polimer news 

Leave a Reply

Your email address will not be published.