ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் – அதிபர் டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் இணைந்து போராட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, ரஷ்யா, துருக்கி, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியா தனது இடத்தில் மட்டும் நின்று கொண்டிருப்பதாகக் கூறிய டிரம்ப், தீவிரவாதிகளை எதிர்த்து தாங்கள் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வது குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் அருகிலேயே இருப்பதாகவும், அந்த நாடு சிறிய அளவிலேயே போராடி வருவதால் அதற்காக தாங்கள் துணையாய் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.