இந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவம், கூறியிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை பன்னாட்டு பிரச்சினையாக பாகிஸ்தான் முயன்றது.
பாகிஸ்தானின் அந்த முயற்சியும் படுதோல்வி அடைந்திருப்பதால், இருநாடுகளின் எல்லையில், தேவையற்ற போர்ப்பதற்றத்தை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேசி, ராணுவத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசீப் கஃபூருடன் (Asif Ghafoor ), ஷா முகமது குரேசி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசீப் கஃபூர், காஷ்மீர் பிரச்சினையை திசைத்திருப்ப, இந்தியா தாக்குதல் நடத்தினால், அதனை எதிர்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார
தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரத்தை, பன்னாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல இருப்பதாக கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில், சிறப்பு காஷ்மீர் பிரிவை ஏற்படுத்துவது பற்றியும், ஆலோசனை நடைபெற்றிருப்பதாகவும், ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.