உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி புலம்பல்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு (பி 5) அல்லது முஸ்லீம் நாடுகளில் ஒரு பகுதியினரிடம் ஆதரவு பெறுவது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு உள்ளது. பி 5 உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி கூறும்போது…

பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளவர்கள் பூக்களுடன் நிற்கவில்லை. பி 5 உறுப்பினர்களில் எவரும் தடையாக இருக்க முடியும். அதில் எந்த தெளிவற்ற தன்மையும் இருக்க முடியாது. முட்டாளின் சொர்க்கத்தில் வாழ வேண்டாம்.

கடந்த ஒரு வாரத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) இரண்டு உறுப்பினர்கள் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் – காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவை ஆதரித்தன, இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.