செப் இளையராஜா மற்றும் செப் சுமேத் வாமன்
செப் இளையராஜா தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்.செப் சுமேத் மகாராஸ்டிராவை சேர்ந்தவர்.இருவரும் 1வது இராஷ்டீரிய ரைபிள்சை சேர்ந்தவர்கள்.
ஆகஸ்டு 13, 2017ல் காஷ்மீரின் பயங்கவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கையில் இரு வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.
13 ஆக 2017ல் தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஷைனாபோரா பகுதியில் உள்ள அவ்நீரா என்ற கிராமத்தில் 5 முதல் 6 முக்கிய ஹிஸ்புல் தலைமை கமாண்டர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் மூலம் பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்தது.
சில உறுதிப்படுத்துதல்களுக்கு பிறகு பாதுகாப்பு படைகள் களமிறங்க முடிவு செய்தன. 1வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் ஐம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்த குழு அந்த கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதலை தொடங்கியது.தேடுதலை தொடங்கியதுமே மறைந்திருந்த பயங்கரவாதிகள் நமது படைகளின் மீது தாக்குதலை தொடங்கினர்.
பயங்கரவாதிகளை கண்டுகொண்ட நமது படை வீரர்கள் கடும் தாக்குதலை தொடங்கினர்.பல மணி நேரம் சண்டை தொடர்ந்து நடைபெற்றது
நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.பயங்கரவாதிகள் வெளியேறும் வழிகள் அடைக்கப்பட்டன.
பயங்கரவாதிகள் கனரக ஆயுதங்களை பெற்றிருந்தனர் மற்றும் இருளும் அவர்களுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால் நடைபெற்ற யுத்தத்தில் செபாய் சுமேத் மற்றும் செபாய் இளையராஜா கடும் காயமடைந்தனர்.இருவரும் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் மேலும் நான்கு வீரர்களும் காயமடைந்திருந்தனர்.ஆனால் செபாய் இளையராஜா மற்றும் செபாய் சுமேத் வீரமரணம் அடைந்னர்.
செபாய் இளையராஜா அவர்களின் வீரதீரம் காரணமாக அவருக்கு சேனா விருது வழங்கப்பட்டது.
வீரவணக்கம்