இந்தியாவின் கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள்
புரோஜெக்ட் 15ஏ திட்டத்தின் கீழ் மசகான் கப்பல்கட்டும் தளத்தால் கட்டப்பட்ட அதிநவீன ஸ்டீல்த் வழிகாட்டு நாசகாரி போர்க்கப்பல்கள் தான் இந்த கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள்.புராேஜெக்ட் 15 திட்டத்தில் கட்டப்பட்ட டெல்லி வகை போர்க்கப்பல்களுக்கு அடுத்த திட்டமாக பி-15ஏ திட்டத்தின் கீழ் இந்த கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.தற்போது புரோஜெக்ட் 15பி-ன் கீழ் விசாகபட்டிணம் வகை நாசகாரி போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது.
மே 2000ல் மூன்று கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் கட்ட அரசு அனுமதி வழங்கியது.மார்ச் 2003ல் முதல் கப்பலுக்கான ஸ்டீல் வெட்டப்பட்டு அதே ஆண்டு செப்டம்பரில் அடிப்படை கட்டுமானம் தொடங்கப்பட்டது.2006ல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்டு 2014ல் படையில் இணைக்கப்பட்டது முதலம கப்பலான கொல்கத்தா.
பிப்ரவரி 2015ல் கப்பலின் செங்குத்தான குழாய் ( Vertical launch system) ஏவுகணை செலுத்து அமைப்பு வழியாக பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் கொச்சி செப்டம்பர் 2015ல் படையில் இணைக்கப்பட்டது.மூன்றாவதும் கடைசி கப்பலுமான ஐஎன்எஸ் சென்னை நவம்பர் 2016ல் படையில் இணைக்கப்பட்டது.
கப்பலில் பல அமைப்புகள் இந்தியாவினுடையது.அதாவது பெரும்பாலான பொருள்கள் மற்றும் அமைப்புகள் இந்தியாவே சொந்தமாக தயாரித்தது.கப்பல்கள் 163மீ நீளமும்,17மீ அகலமும் ,6800டன் எடையும் கொண்டது.
கப்பலில் 16 அறைகள் கொண்ட யுனிவர்சல் செங்குத்து ஏவுகணை செலுத்தும் அமைப்பு உள்ளது.இவைகள் உதவியுடன் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவ முடியும்.
தவிர பாரக் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்காக மேலும் இரு செங்குத்து ஏவுகணை செலுத்தும் அமைப்புகள் உள்ளன. தவிர கப்பலில் நான்கு ஏகே-630 CIWS துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.இவை நிமிடத்திற்கு 5000 குண்டுகளை உமிழக்கூடியவை.இவை கப்பலின் கடைசி கட்ட பாதுகாப்பு ஆகும்.
நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைக்காக இரு குழல் டர்பிடோ செலுத்தி அமைப்பு உள்ளது.தவிர RUB-6000 எனப்படும் ராக்கெட் லாஞ்சர் உள்ளது.இவை 6கிமீ தொலைவுக்கு வரும் நீர்மூழ்கிகளுக்கு எதிராக செயல்பட கூடியது.
ஆக்டிவ் எலக்ட்ரானிகல் ஸ்கேன் அர்ரே எனப்படும் AESA ரேடார் கொண்ட முதல் இந்திய போர்க்கப்பல் இது தான்.இதில் ஒரே சுற்றும் பேனலுக்கு பதிலாக நான்கு நிலையான பேனல்கள் உள்ளன.இதில் பலபணி ரேடார் ஒன்றும் உள்ளது.இதனால் பல சிறிய ரேடார்களின் தேவை குறைக்கப்பட்டுள்ளது.இதற்காக இஸ்ரேலின் MF-STAR ரேடார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
MF-STAR ரேடார் S-band ரேடியோ அதிர்வெண்ணில் வேலை செய்கிறது.நெடுந்தூர தரைப்பரப்பு பகுதி தேடல்,நெடுந்தூர 3D வான் கண்காணிப்பு,Gunnery control,இலக்குகளை பிரித்துணர்வது, Simultaneous multi-engagement support,Guidance for active and semi active missiles போன்றவைகளை இந்த ரேடாரால் செய்ய முடியும்.
இதன் மூலம் அதிநவீ்ன ரேடார் கொண்ட கப்பலாக கொல்கத்தா வகை உள்ளது.24ஏவுகணை ஒரே நேரத்தில் வழிகாட்டி 12 இலக்குகளை தாக்க முடியும்.இதன் மூலம் கப்பல் தன்னை பிற ஏவுகணை தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்.MF-STAR ரேடாரால் 250கிமீ வான் பரப்பு வரையும் , sea skimming க்ரூஸ் ஏவுகணைகளுக்காக 25 km கீழ் வரை தேட முடியும்.இது குறித்த மேலதிக தகவல்கள் இரகசியம்.
இரண்டாம் நிலை ரேடாராக
தாலசின் LW-08 2D ரேடார் உள்ளது.இது D-Bandல் இயங்கும்.இது இலக்கை குறிப்பிடவும் ஆயுதம் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் செயல்படுகிறது.
இதன் முதன்மையான ஆயுதம் 16 செங்குத்தாக ஏவக் கூடிய பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தான்.மிக ஆபத்தான ஆயுதமாகவும் உள்ளது.கிட்டத்தட்ட 300கிமீவரை செல்லக்கூடியது.இதில் இரு வகை உள்ளது. 120 km range in sea skimming profile or 300 km range in a high altitude with a terminal 40 km sea skimming profile.மாக் 2-3 வேகத்தில் செல்லக்கூடியது.வேகமாக செல்வதால் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் கூட இதை வீழ்த்துவது கடினம்.இன்னும் ஏவுகணைகள் ஏவக்கூடிய வகையிலான இடம் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.இந்த இடம் எதிர்காலத்தில் நிர்பயா ஏவுகணைக்காக இருக்கலாம்.
இரண்டாம் நிலை ஆயுதங்களாக 76 mm Oto Melara super rapid gun உள்ளது.நிமிடத்திற்கு120 ரவுண்டுகளை 15கிமீ வரை உமிழக்கூடியது.
பாரக்-8 இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்தியது.90+கிமீ வான் பரப்பில் வரும் சூப்பர்சோனிக் ஏவுகணை முதல் கடல் நீரை ஒட்டி கப்பலை தாக்க வரும் ஏவுகணைகள் வரை அனைத்தையும் வழிமறித்து அழிக்கக்கூடியது.32 பாரக் ஏவுகணைகள் உள்ளன.இதை 64ஆக அதிகரித்துக்கொள்ள முடியும்.ஆனால் கப்பலில் இரண்டாம் நிலை பாதுகாப்பு வளையம் இல்லை.பாரக் மட்டுமே அனைத்து வகையான வான் இலக்குகளையும் தகர்க்க வேண்டும்.அதிநவீன டெஸ்ட்ராயர் கப்பலுக்கு 32 போதாது.இதே போல மற்ற நாட்டுக் கப்பல்களில்
48-96 ஏவுகணைகள் இருக்கும்.
வளர்ந்து வரும் போட்டியில் நாம் நமது பொருளாதாரத்தை பாதுகாத்தல் வேண்டும்.பெரும்பாலான வணிகம் கடல்வழியாகவே நடந்து வருகிறது.நமது பொருளாதாரம் சார்ந்த விசயங்களை பாதுகாக்க நமக்கு வலிமை மிகுந்த கடற்படை அவசியம்.அதற்கு இந்த கொல்கத்தா வகை போர்கப்பல்கள் பேருதவியாக இருக்கும்