தாய்நாட்டிற்கு சேவை செய்யும் விதமாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 575 இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்த 575 இளைஞர்கள் ஸ்ரீநகரில், தங்கள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் ராணுவத்தில் இணைந்து கொண்டனர். தாய்நாட்டிற்காக சேவை செய்வதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ள இளைஞர்கள் மண்ணிற்காக உயிர் தியாகம் செய்யவும் தயார் என கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெஃப்டிணன்ட் ஜெனரல் அஷ்வினி குமார், ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாகவும் இளைஞர்களின் நலனுக்கு இந்திய ராணுவம் எப்போதும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார். காஷ்மீர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது ராணுவத்தில் இளைஞர்கள் இணைந்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது