கோவையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை

கோவையில் ஐந்து இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெறுகிறது. உமர் பாரூக், ஜனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.
கோவை உக்கடம், வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜனாபர் அலி வீட்டில் முதன் முறையாக சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரணைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Polimer 

Leave a Reply

Your email address will not be published.