44 வருட பழைய மிக்-21….தளபதி தனோவா

44 வருட பழைய மிக்-21….தளபதி தனோவா
இந்திய விமானப்படையில் இன்னும் 44வருட பழைய மிக்-21 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.இத்தனை வருட பழைய காரை கூட யாரும் ஓட்டமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
1973-74களில் இந்த இரஷ்ய தயாரிப்பு மிக் 21 படையில் இணைந்தன.
மிக்-21எம் வகை இந்த வருடம் படையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பறக்கும் சவப்பெட்டிகள் என வருணிக்கப்படும் இந்த விமானங்கள் கடந்த ஆண்டுகளில் பல முறை விபத்துக்குள்ளாகியுள்ளது.கிட்டத்தட்ட 170 மிக் விமானங்களை நாம் விபத்துகளில் இழந்துள்ளோம்.
இந்த மிக்-2எம் விமானங்களோடு மிக்-27 ஸ்குவாட்ரானும் விடுவிக்கப்பட உள்ளது.இதோடு இந்திய விமானப்படை ஸ்குவாட்ரான் பலம் 30ஆக சரியும்.
இந்திய தயாரிப்பான தேஜஸ் இதுவரை விபத்துக்கு உள்ளாகவே இல்லை என கூறிய அவர் அதற்கான பாராட்டு  ADA [Aeronautical Development Agency] மற்றும்  NFTC [National Flight Test Centre] ஐ சேரும் என கூறியுள்ளார்.கடந்த 2001ல் சோதனையில் இருந்து இதுவரை ஒரு விபத்தும் ஏற்பட்டதில்லை.

Leave a Reply

Your email address will not be published.