பிரான்ஸ் குறைந்த விலைவில் மேலும் 36 ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு வழங்கலாம்
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் ஐரோப்பா செல்லும் வேளையில் மேலதிக ரபேலை இந்தியாவிற்கு வழங்குவது குறிந்து பிரான்ஸ் அரசு பேசலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உனடியாக வழங்கும் வகையில் மேலும் இரு ஸ்குவாட்ரான்கள் ரபேல் விமானம் வழங்குவது குறித்து பேசப்படும் என பிரான்ஸ் செய்தி வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்திய விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கையை குறைந்த அளவு சரிசெய்ய இந்த மேலதிக விமானங்கள் உதவும்.
இந்த விமானங்கள் குறைந்த விளையில் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த புதிய இரு ஸ்குவாட்ரான்கள் 6 பில்லியன் யூரோக்களுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.