கராச்சிக்கு மேலே 3 விமான வழிப்பாதைகளை பாகிஸ்தான் மூடியது

கராச்சிக்கு மேலே 3 விமான வழிப்பாதைகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.

பாலகோட் பயங்கரவாத முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் தனது விமான வழிப்பாதையை முற்றிலுமாக மூடியது. பின்னர், சில நாடுகளுக்காக திறந்து விட்டாலும், இந்தியாவுக்கு தடையை தொடர்ந்தது. ஜூலை 16-ந் தேதிதான், இந்திய விமானங்களுக்கு தனது பாதையை முழுவதுமாக திறந்து விட்டது.

இதற்கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமானங்களுக்கு தனது பாதையை முற்றிலுமாக மூடுவது பற்றி பாகிஸ்தான் மந்திரிசபை ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், கராச்சி நகருக்கு மேலே 3 விமான வழிப்பாதைகளை பாகிஸ்தான் மூடியுள்ளது. நேற்று முதல் 31-ந் தேதிவரை 4 நாட்களுக்கு இத்தடை அமலில் இருக்கும். இதனால் சர்வதேச விமானங்கள், கராச்சியை சுற்றி மாற்று வழியில் செல்ல வேண்டி இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published.