Breaking News

Day: August 28, 2019

சீன ராணுவத்திற்கு இந்தியா சளைத்ததல்ல: நாரவனே

August 28, 2019

சீனா ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சளைத்ததல்ல என கிழக்கு பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் எம்.எம்.நாரவனே கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் இனி 1962 ஆம் ஆண்டில் இருந்த ராணுவம் அல்ல. வரலாற்றை மறந்து விடாதீர்கள் என சீனா சொன்னால் அவர்களுக்கும் இதே விஷயத்தை சொல்ல வேண்டும். 1962 ம் ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட தோல்வியை கருப்பு அடையாளமாக பார்க்க வில்லை. அந்த நேரத்தில் நமது ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் நன்றாக போராடின. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட […]

Read More

பொதுமக்கள் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்

August 28, 2019

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் 2 பேரை கடத்தி  தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் டிராலில்((Tral)) கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர்கள் டிராலில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 20 ஆம் தேதி கடத்தப்பட்ட 2 பேரையும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில்((Lachi Top Behak forest)) ஹதீர் கோலி, […]

Read More

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறப்பதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு

August 28, 2019

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. இந்நிலையில் ஐநா சபையில் காஷ்மீர் பிரச்னையை முன்னெடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் சீனா மட்டுமே ஆதரவளித்த நிலையில் தோல்வியடைந்தன. இதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையைப் பயன்படுத்துவதில் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு […]

Read More

காஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி ஆலோசனை

August 28, 2019

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது.  இதனால் பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளது.  இந்த சூழலில்,  பாகிஸ்தான் சென்றுள்ள சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் […]

Read More

அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்

August 28, 2019

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய வருகையின் போது, அவாக்ஸ் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு கொள்முதல் மற்றும் டெர்பி ஏவுகணைகள் பாயும் வரம்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியா வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி அன்று அவரது பாதுகாப்புக் குழு ஒன்று டெல்லி வருகிறது. பெஞ்சமின் நேதன்யாகுவின் பாதுகாப்பு ஆயத்தப் பணிகளை அந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது. அடுத்த மாதம் 7 […]

Read More

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் – பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்

August 28, 2019

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மோடி, காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாடு சமரசம் செய்வதற்கு இடமில்லை. அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்த்துக்கொள்ளும் என்று கூறினார்.இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். […]

Read More

பாகிஸ்தான் உளவாளி கைது; இந்திய ராணுவ நிலைகள் குறித்த முக்கியமான ஆவணங்கள் பறிமுதல்

August 28, 2019

பாகிஸ்தான் உளவாளி அலி முர்தாஸாவை அம்பாலா போலீஸ் கைது செய்துள்ளது. அவனிடம் இருந்து முக்கியமான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதுராஜஸ்தான் மாநிலம் பர்மெருக்குள் சுற்றுலா விசா மூலம் நுழைந்த 32 வயதாகும் பாகிஸ்தான் உளவாளி முர்தாஸா, விசா விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளான். பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. உளவாளியான அவன் அம்பாலாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். அவனுடைய நகர்வு குறித்து ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பை மேற்கொள்ளும் ராணுவ உளவுப்பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில் அம்பாலா போலீஸ் கைது […]

Read More