- சகவீரர்களுக்காக 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்ட கிரேகவுன்ட் கமாண்டோ
ஆந்திராவின் சிறப்பு படையான கிரேகௌன்ட் நக்சல் எதிர்ப்பு படையை சேர்ந்த வீரர் தமது சக நண்பர்களை காப்பாற்ற 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்டு வீரமரணம் அடைந்த வீரரின் கதை இது.
தனது வீரர்களுக்காக தனது 32வது அகவையில் வீரமரணமடைந்த அவருக்கு இந்தியா அமைதிக் காலத்தில் வழங்கும் மிக உயரிய விருது அளித்து பெருமை கொண்டது.
ஜனவரி 26, 2014ல் குடியரசு தினத்தன்று வீரரின் அப்பா கரணம் வெங்கட ரமனா அவர்கள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் இருந்து விருதை தனது மகன் சார்பில் பெற்றுக்கொண்டார்.அவரது மகன் கே.பிரசாத் பாபு ஆந்திர ஆந்திராவின் சிறப்பு நக்சல் எதிர்ப்பு படையான கிரேகௌன்ட் படையில் துணை ஆய்வாளராக பணியாற்றியவர்.அவரின் வீரக்கதையை கான்போம் நண்பர்களே!
ஆந்திராவின் விசாக் மாவட்டத்தின் மர்டுரு கிராமத்தில் இருந்து ஆந்திர காவல் துறையில் இணைந்து தனது நாட்டிற்காக வீரமரணம் அடைந்த போது அவருக்கு வயது 32 தான்.அன்றைய தினமான ஏப்ரல் 16,2013 ல் அவர் தனது சக அதிகாரிகள் நான்கு பேரை காப்பாற்றி ஒன்பது மிக முக்கிய நக்சல்களை வீழ்த்தினார்.
” குடியரசு தலைவர் விருதை எனக்கு அளித்தவுடனேயே எனக்கு பரேடு முடிந்தது.நான் விருதை பெற்றவுடன் பிரதமர் மன்மோகன் சிங் என்னிடம் ஏதோ கூறினார்.என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை.அதன் பின் பரேடு மங்களாக நடந்து முடிந்தது.இந்த விருது மற்றும் அவன் நினைவுகளோடு இனி நானும் எனது மனையும் வாழ்வோம்” என விருதை பெற்ற அவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறியவை.
வீரர் பிரசாத் பாபுவுக்கு விருது வழங்கிய போது வாசிக்கப்படும் காரணத்தை கேட்டவர்கள் ஆச்சரியத்திலும் அதே நேரம் சோகத்திலும் ஒருசேர மூழ்கி தவிப்பதை விலக்க முடியாது.அது அத்தகைய வீரம்.
2004ல் ஆந்திர காவல் துறையில் இணைந்த பிரசாத் பாபு தனது திறமையினால் மிக விரைவாகலே ஆந்திர மாநிலம் மட்டுமல்ல மொத்த இந்தியாவிலுமே ஆகச்சிறந்த நக்சல் எதிர்ப்பு படையாக கருதப்படும் ஆந்திர காவல் துறையின் சிறப்பு படையான கிரேகௌன்ட் படைக்கு மாற்றப்பட்டார்.இந்தப்படை நக்சல்களை எதிர்கொள்ளும் விதம் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள்,காடுசார் போர்முறைகளுக்காக சிறப்புபெயர் பெற்ற படை.பிரசாத் பாபுவின் திறமையும் அந்நாளில் வெளிப்பட்டது.
ஆந்திர-சத்திஸ்கர் மாநில எல்லையில் அதிக அளவு நக்சல்கள் தென்படுவதாக தகவல்கள் கிடைக்க ஐந்து தாக்கும் குழுவாக கிரேகௌன்ட் படை அங்கு நக்சல்களை ஒடுக்க சென்றது
ஏப்ரல் 16க்கு முந்தைய நாள் இரவு அடர்ந்த காடுகளில் 40கிமீ ஊடுருவி சென்றது.வழியில் கன்னிவெடி மற்றும் மற்ற பயங்கரவாத குழுக்களும் தாக்கலாம் என்ற நிலை.அதிகாலை 3.30மணிக்கு சரியான இடத்தை படைகள் அடைந்தன.ஏப்ரல் 16 அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமது வீரர்களை 70 மாவோயிஸ்டுகள் அடங்கிய குழு தங்களது கண்ணிவெடி மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தாக்கினர்.
ஆனால் வீரர் பிரசாத் பாபு மற்றும் அவரது வீரர்கள் நக்சல்கள் தாக்குதலை ஊடறுத்து கிட்டத்தட்ட ஒன்பது முக்கிய நக்சல்களை வீழ்த்தி மற்றவர்கள் சிலபேரை காயப்படுத்தினர்.
அடுத்த நாள் நமது வீரர்களை மீட்க வானூர்திகள் வந்தன.ஐந்து முறை பறந்து வந்து கமாண்டோ வீரர்களை மீட்டு சென்றனர்.ஐந்தாவது முறையாக வந்த வானூர்தி பிரசாத் பாபு மற்றும் மற்ற 19 கமாண்டோக்களை மீட்பதாக இருந்தது.ஆனால் 70 மாவோயிஸ்டுகள் சூழ்ந்து வானூர்தி நோக்கி சுட தொடங்கினர்.19 கமாண்டோ மீட்கப்பட வேண்டிய நிலையில் 14 வீரர்கள் வானூர்தியில் ஏற மற்ற ஐந்து வீரர்கள் வானூர்திக்கு பாதுகாப்பாக நக்சல்களுடன் போரிட்டனர்.அதில் பிரசாத் பாபுவும் ஒருவர்.
ஐந்து வீரர்களும் திறமையாக 70 மாவோயிஸ்டுகள் மற்றும் மற்ற பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொண்டே மீட்கப்படும் வானூர்தி நோக்கி சென்றனர்.பிரசாத் பாபு தனது பாதுகாப்பு சிறிதும் பொருள்படுத்தாமல் மாவோயிஸ்டுகளை தடுத்து சுட்டுக்கொண்டிருந்தார்.வானூர்தி மேலெழும்பிய உடன் மீண்டும் பயங்கரவாதிகள் ஐந்து வீரர்களை சுற்றி வளைத்து தாக்க தொடங்கினர்.தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கிரேனேடுகள் வீசி தாக்க தொடங்கினர்.
சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் தாக்கிய பகுதியில் தெற்கு பக்கம் மட்டுமே வழியிருந்தது.அதாவது தெற்கு பக்கம் மட்டும் மாவோயிஸ்டுகள் இல்லாத நிலை.தற்போது அவர்களை கிட்டத்தட்ட 200 பயங்கரவாதிகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர்.பிரசாத் பாபுவிற்கு வேறு வழியில்லாமல் மற்ற நான்கு வீரர்களையும் தெற்கு பக்கமாக பின்வாங்க கூறி அவர் மற்றும் நின்று 200 பயங்கரவாதிகளை சமாளித்தார்.
மற்ற நான்கு வீரர்களுடன் பின்வாங்காமல் பிரசாத் பாபு தைரியான முடிவு ஒன்று எடுத்தார்.தனது நண்பர்களை காப்பாற்ற 200 பயங்கரவாதிகளுடன் நின்று சண்டையிடுவது என முடிவு எடுத்தார்.
நான்கு வீரர்களும் வெற்றிகரமாக பின்வாங்கி சென்று பத்திரமான இடத்திற்கு சென்றனர்.ஆனால் பிரசாத் பாபுவை மாவோயிஸ்டுகளை பிடித்து, சித்ரவதை செய்து பின் சுட்டுக்கொன்றனர்.14 வீரர்களை காப்பாற்ற உதவியது, நான்கு வீரர்களை பத்திரமான இடத்திற்கு அனுப்ப உதவியது , போரில் அவர் காட்டிய வீரதீரம் காரணமாக அவருக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
கிரேகவுண்டு வீரர்களை பற்றி பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை.அவர்களது நடவடிக்கைகள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.1989ல் வியாஸ் ஐபிஎஸ் அவர்களால் இந்த படை தொடங்கப்பட்டது.பின்னாளில் அவரே மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டார்.கிரேகவுன்ட் வீரர்கள் தங்கள் தாக்குதலில் 98% வெற்றியை சுவைக்கின்றனர்..
1995 முதல் 2016 வரை 163 காவல்துறை வீரர்கள் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வேளையில் 1780 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 80% பேரை கொன்றது கிரேகவுன்ட் வீரர்கள் தான்.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளின் முதுகெலும்பை உடைத்தது கிரேகவுன்ட் வீரர்கள் தான்.
இளவயதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரரகள் 15 வருட பணிக்கு பிறகு பழைய காவல் துறை பணிக்கே அனுப்பப்படுகின்றனர்.35வயதுக்கு மேல் யாரும் படையில் இல்லை என்பதால் ஒட்டுமொத்த படையும் இளமையாக துடிப்புடன் இருக்கிறது.ஒரு ஆபரேசனுக்காக 30கிமீ மலைப்பகுதியில் சுற்றுகின்றனர்.சிறிய அளவிலான ரேசன்கள் மற்றும் உலர்பழங்கள் உதவியுடன் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை இவர்களால் காடுகளில் பிழைத்திருக்க முடியும்.
பிரசாத் பாபுடின் திறன் உங்களுக்கு இவற்றை புலப்படுத்தும்.