முதல் ரபேல் செப்டம்பர் 20ல் இந்தியா வருகிறது

முதல் ரபேல் செப்டம்பர் 20ல் இந்தியா வருகிறது

இந்திய விமானப்படை தளபதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் இதற்காக வரும் செப்டம்பர் 20ல் பிரான்ஸ் சென்று முதல் ரபேல் விமானத்தை பெறுவர்.

விமானப்படை தளபதி மற்றும் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள்  முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் ரபேல் விமானத்தை வரவேற்பார்.

செப்டம்பரின் மூன்றாவது வாரத்தில் இந்த விழா நடைபெறும் வேளையில் பிரான்ஸ் அரசு சார்பிலும் ஏராளமான அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியா விமானப்படை மூன்று வெவ்வேறு தொகுதிகளாக 24 விமானிகளை ரபேல் விமானத்தில் பறக்க பயிற்சி அளித்து வருகிறது.

ஹரியானாவில் உள்ள அம்பாலா மற்றும் பெங்காலில் உள்ள ஹசிமாரா தளத்தில் ஒரு ஸ்குவாட்ரான்கள் முறையே நிலைநிறுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.