பொதுமக்கள் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் 2 பேரை கடத்தி  தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தின் டிராலில்((Tral)) கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர்கள் டிராலில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 20 ஆம் தேதி கடத்தப்பட்ட 2 பேரையும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில்((Lachi Top Behak forest)) ஹதீர் கோலி, மன்சூர் அகமது கோலியை சடலமாக போலீசார் மீட்டுள்ளனர்.

உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. டிரால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகளை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் அங்கு நடக்கும் முதல் தீவிரவாத தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்பு எப்போதும் இல்லாத அளவு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.