தேஜஸ் மார்க்2 மற்றும் AMCA பற்றிய தகவல்கள்

தேஜஸ் மார்க்2 மற்றும் AMCA பற்றிய தகவல்கள்

இந்தியாவின் மிக முக்கிய விமானத்தயாரிப்பான MWF/LCA MK2 2022லும் Stealth AMCA  2024லும் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் Aeronautical Development Agency (ADA) அதிஎடை stand-off weapon திறனுடன் 2022ல் தேஜஸ் மார்க் 2 விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானத்தை 2025வாக்கில் இந்தியாவின் ஹால் நிறுவனம் தொடர் தயாரிப்புக்கு உட்படுத்தும் என முக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 2018ல் 17.5டன் எடையுடைய தேஜஸ் மார்க் 2 விமானத்தின் இறுதி வடிவமைப்பு குறித்த பணிகளை டிஆர்டிஓவின் ஏடிஏ முடித்தது.அதன் பிறகு இந்த வருட இறுதிக்குள் இரு என்ஜின்கள் கொண்ட ஐந்தாம் தலைமுறை விமானத்தின் வடிவமைப்பு பணிகளை இந்த வருட இறுதிக்குள் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேஜஸ் மார்க் 2 விமானம் மிராஜ் ,ஜாகுவார் மற்றும் கிரிப்பென் போன்ற விமானங்களின் எடையை கொண்டிருக்கும் எனவும் இதில் எடை அதிக  GE 414 என்ஜின் பொருத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேஜஸ் மார்க் 2 விமானத்தில் இந்தியத் தயாரிப்பு உத்தம்
 AESA ரேடார் மற்றும் இந்திய தயாரிப்பு வான்-வான் ஏவுகணை அஸ்த்திரா பொருத்தப்படும்.கண்ணுக்கு எட்டுவதற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமைை கொண்ட அஸ்திரா தற்போது சுகாய் விமானத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ADA மற்றும் IAF இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானம் advanced medium combat aircraft (AMCA) மேம்பாட்டில் மும்மரமாக இயங்கி வருகிறது.

சூப்பர் க்ரூஸ் வேகத்தில் செல்லக்கூடிய இரு என்ஜிகளுடன் தனது வயிற்றுப்பகுதி உள் அறைகள் வழியாக ஏவுகணைகளை மறைத்து வைத்து ஏவும் திறம் கொண்ட 25 டன் எடையுடைய ஏஎம்சிஏ விமானம் 2024 வாக்கில் தனது முதல் பறத்தலை மேற்கொள்ளும்.விமானத்தின் என்ஜினும் ஸ்டீல்த் தொழில்நுட்பத்தில் வரும்.விமானத்தின் சூப்பர் க்ரூஸ் என்ஜின் after burners செய்யாமலயே வேகமாக செல்ல உதவும் என்பதால் ரேடாரில் மிகக் குறைவாகவே அகப்படும்..

இந்த தேஜஸ் மற்றும் ஏஎம்சிஏ வகைகளில் முதல் வகை 11 டன்கள் எடையுடன் மிக இலகுவானதாக இருக்கும்.

பார்க்கலாம்…என் கணிப்புபடி விமானத் தயாரிப்பு சரியாக சென்றால் தேஜஸ் மார்க் 2 2025க்குள் வரும்..ஏஎம்சிஏ 2028க்குள் தொடர் தயாரிப்புக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.