Day: August 9, 2019

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் – பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம்

August 9, 2019

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆப்கானில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. 2020-ல் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடவிரும்பும் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் படைகளை ஆப்கானிலிருந்து திரும்ப பெற நடவடிக்கையை மேற்கொள்கிறார். இதுவரையில் தலிபான்களுக்கு உதவிய பாகிஸ்தான், இனி தனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்பியது. காஷ்மீர் விவகாரத்தில் தலிபான் தன்னுடன் கைக்கோர்க்கும் […]

Read More

தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் நிறுத்தம் ‘யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது’ பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்

August 9, 2019

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதில் கூறியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பதிலடி தருவதற்காக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்தியாவுடனான தூதரக உறவுகளை குறைத்துக்கொண்டது. வர்த்தக உறவை நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நேற்று நிறுத்தியது. இந்நிலையில் மற்றொரு ரெயில் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கோக்ராபூரிலிருந்து ராஜஸ்தானின் பர்மெர் வரையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் […]

Read More

இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார்

August 9, 2019

இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டதை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம் என்ற நிலையில் கடற்படை உஷார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Read More