Day: August 2, 2019

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி – இந்திய ராணுவம்

August 2, 2019

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது என இந்திய ராணுவம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை பக்தர்களை தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளை ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்புப் படைகள் தகர்த்தெறிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் இருவழிப்பாதையில் பாகிஸ்தான் ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகுண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களை இந்திய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. புகைப்படங்களை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், காஷ்மீரில் […]

Read More

உங்கள் மகன்கள் பயங்கரவாதியாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்… காஷ்மீர் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை

August 2, 2019

உங்கள் மகன்கள் பயங்கரவாதிகளாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரில் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்திய ராணுவம் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுக்கும் விதமாக ஸ்திரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்திய விமானப்படையின் எல்லைத் தாண்டிய தாக்குதலால் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் பயங்கரவாதிகளின் செயல் காஷ்மீரில் காணப்பட்டு வருகிறது. மாநிலத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் சக்திகளை அடையாளம் கண்டு ஒடுக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உளவுப்பிரிவு […]

Read More

பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பெறும் முதல் நாடு தாய்லாந்து ?

August 2, 2019

பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பெறும் முதல் நாடு தாய்லாந்து ? பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பெறும் முயற்சியாக தாய்லாந்து அரசு இந்தியாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையை இறக்குமதி செய்ய சாதாகமாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது.இந்த வருடத்தில் நடக்காது எனினும் அடுத்த வருடத்தில் நடந்து முடியலாம் என தகவல்கள் வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் தாய் நாட்டு கடற்படை தளபதி இந்தியா வந்திருந்த […]

Read More

ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்துப் பணியில் தோனி

August 2, 2019

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இரண்டு வாரங்களுக்கு ராணுவக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணியை மேற்கொள்ள இருக்கிறார். அண்மையில் இந்திய அணியின் மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்தில் தோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அவர் ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாக ராணுவத் தலைமை ஒப்புதல் அளித்தது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் இணைந்து அவர் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பாராசூட்டில் இருந்து கீழே […]

Read More

விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

August 2, 2019

நகரில் விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரில் ஏற்கனவே வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

காஷ்மீருக்கு நகர்த்தப்படும் 25,000 வீரர்கள்- காரணம் என்ன ?

August 2, 2019

காஷ்மீருக்கு நகர்த்தப்படும் 25,000 வீரர்கள்- காரணம் என்ன ? காஷ்மிருக்கு 25,000 துணை இராணுவப்படை வீரர்கள் அனுப்பப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான காரணம் பெரிதாக வெளியிடப்படவில்லை எனினும் பாதுகாப்புக்காக இத்தனை பெரிய படை அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக சுமார் 10000 வீரர்கள் அனுப்பப்பட்டு தற்போது மேலதிக படைகள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 25000க்கும் மேற்பட்ட துணை இராணுவப்படையினர் காஷ்மீருக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அனுப்பப்படும் வீரர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என […]

Read More