எந்த போர் சூழலையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.
கார்கில் போரின் 20-வது ஆண்டு தினத்தை ஒட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்கில் போன்ற மற்றொரு போர்க்கள சூழல் உருவானால் அதனை எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது என்றார்.
எந்த சூழலிலும் குண்டு வீசி தாக்கும் வல்லமை இந்திய விமானப்படைக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேகத்திரள்கள் மறைத்தாலும் இலக்கை அழிக்கும் வல்லமை இந்திய விமானப்படைக்கு உண்டு என்ற அவர், பாலக்கோட் தாக்குதலே இதற்கு சிறந்த உதாரணம் என்றார். இலக்கு எத்தனை தூரத்தில் இருந்தாலும் துல்லிய தாக்குதலை நடத்தும் முழு வல்லமையை இந்திய விமானப்படை கொண்டுள்ளதாக தனோவா தெரிவித்தார்.