பாரா வீரர்களின் சாகசம்- ஆபரேசன் அப்பாச்சி

பாரா வீரர்களின் சாகசம்- ஆபரேசன் அப்பாச்சி

நாட்டுமக்களின் அமைதிக்காகவே நம் வீரர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்கின்றனர்.அந்த அமைதியை குலைக்கும் வகையில் எதிரிகள்  செயல்பட்டால் அவர்களுக்கு பதிலடி தரவும் நமது வீரர்கள் தயங்க மாட்டார்கள்.

மக்களின் அமைதியை குலைக்க நினைத்தால் அதற்கு தகுந்த விலையை எதிரி மறக்கவே முடியாத அளவுக்கு திருப்பி தர வேண்டும் என்பதே நமது வீரர்களின் நோக்கம்.இந்த கதையும் அத்தகையதே.

பல ஆண்டுகளுக்கு இந்த உண்மை சம்பவம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இராணுவ ஆய்வாளர்களுக்க ஓரளவுக்கு நடந்த சம்பவம் தெரியும்.தமிழ் மக்களுக்கு இந்த சம்பவத்தை தெரியப்படுத்துவதற்காக இந்த வரலாற்றை மொழிபெயர்க்கிறேன்.

பொதுவாக பாரா வீரர்கள் நடத்தும் ஆபரேசன்கள் அனைத்துமே இரகசியமானவை.அவை வெளியில் தெரிய வாய்ப்பில்லை.மக்களுக்கோ அல்லது சகவீரர்களுக்கோ ஏதேனும் நடந்தால் கருப்ப காற்று போல நம் பாரா வீரர்கள் சுழன்று அடிப்பார்கள்.பொதுவாக அனைத்துமே கம்பெனி லெவல் ஆபரேசன்களே.

இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Year 2001

பகர்வால் என்பது காஷ்மீரில் வாழும் ஒரு இனக்குழு.இமாலய மலைப்பகுதி மற்றும் பீர்பாஞ்சல் பகுதியில் வாழும் இம்மக்கள் ஆடுமேய்த்தலையே தன் பிரதான தொழிலாக கொண்டவர்கள்.

2001 ஆண்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பெருமளவு இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்தனர்.அதே போல தான் இந்திய இராணுவமும் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசனும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தது.

பயங்கரவாதிகளால் சரியான முறையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியவில்லை.ஏனெனில் இந்திய இராணுவம் மிக துடிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இதில் கோபமடைந்த பாகிஸ்தானியர்கள் கோழைத்தனமான முறையில் அப்பாவிகளை புறமுதுகு வழியாக தாக்க தொடங்கினர்.எல்லைக் கோட்டுப்பகுதியில் நெருங்கிய இடத்தில் பகர்வால் மக்களை தாக்கி அவர்களின தலையை கொய்து அவர்களின் விலங்குகளை களவாடி கொடுமைகள் செய்யத் தொடங்கினர்.

மக்கள் இராணுவத்தின் உதவியை நாடினார்கள்.பாரா வீரர்கள் சிரித்தனர்.பாகிஸ்தானியர்களை வேட்டையாட மீண்டும் ஒரு வாய்ப்பு.

இந்த முறை பைரட்டுகள் என அழைக்கப்படும் 9 பாரா வீரர்கள் களம் சென்றனர்.அவர்களுக்கு 9வது பாரா பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரியே தலைமை தாங்கி சென்றார்.பாகிஸ்தானியர் நல்ல மறக்க முடியாத பாடத்தை கற்பிப்பது திட்டம்.

ஆபரேசன் அப்பாச்சி தொடங்கியது.எல்லைக்கோட்டை தொட்ட செக்டாரில் ஆபரேசன் ஆரம்பமாகியது.இந்த ஆபரேசன் மிக இரகசியமாக நடத்தப்பட்டது.அப்போதைய அரசுக்கே கூட தெரிந்திருக்கவில்லை என தகலல்கள் கூறுகின்றன.

இந்த ஆபரேசன் சிறப்பு வாய்ந்தது.ஏனெனில் இந்த முறை தங்கள் CO ( Commanding officer) நேரடியாகவே தலைமை தாங்கினர்.

19 நவம்பர் 2001

கரும் இருட்டு..70 வீரர்கள் உள்ளடக்கிய 9வது பாரா வீரர்கள் குழு எல்லைக் கோட்டை கடந்தது.வேண்டுமென்றே பாகிஸ்தான் இராணுவத்தின் மிகப்பெரிய பிரிகேடுக்கு சில கிமீ தூரத்தில் இந்த ஆபரேசன் நடத்தப்பட்டது.எங்களால் எதையும் சாதிக்க முடியும் என பாகிஸ்தானியர்களுக்கு புரிய வைக்க இவ்வாறு செய்யப்பட்டது.

இவ்வளவு பெரிய பாரா வீரர்களை கண்டதுமே பாகிஸ்தானியர்கள் சிறுநீர் தெரித்தது ( ஆம் 70 வீரர்கள் என்பது ஆகப் பெரிய படை..ஏனெனில் அவர்கள் சிறப்பு படை வீரர்கள் )..பாகிஸ்தானியர்கள் பார்த்ததுமே அவர்கள் பாரா வீரர்கள் என்பதை கண்டுகொண்டனர்.நமது வீரர்கள் இலக்குகளை உறுதிப்படுத்தி கொண்டு தாக்குதலை தொடங்கினர். எதிரியின் கண்முன் சிவப்பு பேய் போல தோன்றி அவர்களின் தலைகளை கொய்தனர்.எவரும் தப்பிக்க இயலவில்லை.இவை அனைத்தும் பெரிய பாகிஸ்தானா இராணுவ பிரைகேடுக்கு அருகிலேயே நடக்கிறது.

இந்த நடவடிக்கையின் போது ஒரு 6அடி 4இன்ச்  பாகிஸ்தான் பதானிய வீரன் நமது வீரரை முதுகில் கத்தியால் குத்த முயன்றான்.ஆனால் அவன் கதை சில நொடிகளிலேயே முடிக்கப்பட்டது.நமது வீரருக்கு காயம் ஏற்பட்டது.ஆனால் பின்வாங்குதல் இல்லை.நமது வீரருக்கு அங்கேயே மருத்துவ உதவி வழங்கப்பட்டு நடவடிக்கை தொடர்ந்தது.

அந்த நேரத்தில் பாரா வீரர்களின் சிவப்பு இரத்தம் கொதித்து எதிரிகளின் தலையை கொய்து தாய்நாடு திரும்பினர்.

காற்றைப் போல வந்தவர்கள் காற்றை போலவே மறைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.