அல்கொய்தாவின் மிரட்டல்களுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது

அல்கொய்தாவின் மிரட்டல்களுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது

நாட்டின் எந்த பாகத்தையும் காக்கும் வல்லமை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான அய்மான் அல் ஜவாகிரி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில், காஷ்மீரில் இந்திய படைகளுக்கும், அரசுக்கும் எதிராக தாக்குதலில் ஈடுபடுமாறு பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவேஷ்குமார், ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட அல் கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களை கண்டு இந்தியா ஒரு போதும் நடுங்காது என்றார்.
அடிக்கடி விடுக்கப்படும் இது போன்ற மிரட்டல்களை இந்திய அரசு போதும் சட்டை செய்வதில்லை என்ற அவர், நாட்டின் இறையாண்மையையும், எந்த இடத்தையும் காக்கும் வல்லமை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published.