கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்களின் வீரக்கதை

இந்தியர்கள் மறந்த கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்களின் வீரக்கதை

ஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவத் 20 மே 1918 அன்று இராஜஸ்தான் மாநிலத்தின் ஜீன்ஜீனு மாவட்டத்தில் உள்ள ராம்புரா பெரி கிராமத்தில் பிறந்தார்.இராஜ்புத் இராணுவ வரலாறு கொண்ட பெரிய குடும்பம்.அவரது குடும்பம் முழு இராணுவ பின்னனி கொண்டது.அவரது ஐயா நாய்ப் சுபேதார் சேலு சிங் செகாவத் 125வது நேப்பியர் ரைபிள்சில் பணிபுரிந்தவர்.அவரது அப்பா சுபேதார் பான் சிங் செகாவத் இராஜபுதன ரைபிள்சின் 4வது பட்டாலியனில் பணிபுரிந்தவர்.அவர்களின் இளைய மகன் தான் ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்கள்.

கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் 1936ம் ஆண்டு 20மே மாதத்தில் 6வது இராஜபுதன ரைபிள்சில் இணைந்து தேசப் பணிக்கு தன்னை அர்பணித்தார்

காஷ்மீர் நடவடிக்கை18 ஜீலை 1948

1948ல் பாகிஸ்தான் பதான் பழங்குடியினர் மற்றும் இராணுவத்தினர் காஷ்மீர் மலைப்பகுதியில் இருந்த டித்வால் என்ற கிராமத்தை கைப்பற்றினர்.மேலும் கிசான்கங்கா ஆற்றுப்பகுதியையும் கைப்பற்ற அவர்கள் தயாரான வேளையில் இந்திய இராணுவம் அந்த பகுதிக்கு படைகளை அனுப்பியது.

டித்வால் பகுதியை கைப்பற்றவும் ஆற்றுப்பகுதியில் நமது படைகளின் வலிமையை கூட்டவும் 6வது இராஜபுதன ரைபிள்ஸ் படையை இராணுவம் அனுப்பியது.

11 ஜீலை தொடங்கிய சண்டை 15 ஜீலை வரை நீடித்தது.சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்த முக்கிய பகுதிகளை பாதுகாக்க இரு கம்பெனி இராணுவம் அனுப்பப்பட்டது.அதில் முதல் பகுதிகளை காக்க அனுப்பப்பட்ட “டி கம்பெனி” படை கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்களின் தலைமையில் செயல்பட்டது.எதிகள் கைப்பறிய பகுதிகளை திரும்ப கைப்பற்ற படை முடுக்கிவிடப்பட்டது.குறுகலான வழி,இடுக்குவழியாக இருந்த பகுதியின் இரு மருங்கிலுமே எதிரி பங்கர்கள் இருந்தன.நம் வீரர்கள் அதனுள் சென்றாலே எதிரியின் நடுத்தர ரக இயந்திய துப்பாக்கி தாக்குதலுக்கு ஆளாகும் நிலை.ஆனால் கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்கள் மனம் தளரவில்லை.அவரது மனம் தோல்விக்கு ஒப்புக்கொள்ளவில்லை.அவரது படைவீரர்களைஊக்குவித்தார். அவர்கள் தங்கள் போர்குரலில் “ராஜா ராமச்சந்திர கி ஜே” என முன்னே சென்று எதிரிகளை வீழ்த்த ஆயத்தமானார்கள்.

நமது வீரர்கள் முன்னேறிய வெறும் அரை மணிநேரத்திலேயே பாதி கம்பெனி வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஹவில்தார் மேஜர் பிரு சிங் முன்னனியில் இருந்து வீரர்களை வழிநடத்தி கொண்டிருந்தார்.எதிரிகள் குண்டுமழையை பொழிந்துகொண்டிருந்தனர்.அவர் முன்னேறி எதிரிகளின் நடுத்தர ரக இயந்திர துப்பாக்கி நிலைகளை தாக்க தொடங்கினார்.எதிரி கிரேனேடை வீச அது வெடித்து அவரது உடை கிழிந்து உடம்பு முழுதும் சிராய்ந்தது.தளரவில்லை, வேகமாக முன்னேறி எதிரிகளை தாக்கினார்.துப்பாக்கி முனை கத்தியால் எதிரியை குத்தி அந்த நடுத்தர இயந்திர துப்பாக்கி நிலையை கைப்பற்றினார்.இந்நிலையிலேயே பெரும்பாலான கம்பெனி வீரர்கள் மரணித்திருந்தனர்.

காயம்பட்டு தனித்திருந்த அவர் மறைவில் இருந்து வெளிப்பட்டு இரண்டாவது நிலையை கைப்பற்ற முன்னேறினார்.இரண்டாவது கிரேனேடு அவரை தாக்கியது.அவரது பாதி முகம் முழுதும் இரத்தம் ஓடுகிறது.அவரது வெடிப்பொருள்களும் முடிந்திருந்தது மற்றும் அவர் படுகாயமடைந்திருந்தார்.ஆனால் அவர் பின்வாங்கவே இல்லை.

இரண்டாவது எதிரி நிலையின் மறைகுழிக்குள் ஒரு கிரேனேடை வீசி, மற்றுமொரு மறை குழியில் இருந்த இரண்டு எதிரி வீரர்களை தன் துப்பாக்கி முனை கத்தியால் குத்தி இரண்டாவது எதிரி நிலையையும் கைப்பற்றினார்.

இரண்டாவது நிலையில் இருந்து வெளிவந்த போது ஒரு தோட்டா அவரது தலையில் பாய ,எதிரி நிலையின் முனை அருகே கீழே விழுந்தார்.ஆனால் மூன்றாவது எதிரி நிலையில் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.ஆம் மூன்றாவது நிலையில் வெடித்தது ஹவில்தார் மேஜர் பிரு அவர்களின் கிரேனேடு தன் பணியை செய்து முடித்திருந்தது.கீழே விழுந்த அவர் வீரத்துடன் சுயநலமின்றி தன் பணியை செய்து முடித்திருந்தார்.

அவர் தாய் நாட்டிற்கு தன் உயிரை அற்பணித்தார்.அவரது சுயநலமில்லா பொதுநலம் மற்றும் உட்சபட்ட வீரம் மற்றும் தியாகம் காரணமாக அவருக்கு இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.அவரது வீரக்கதை மில்லியன் இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்ககூடியதாய் உள்ளது.தாய் நாட்டின் மீதான அவரது காதல் இனி என்றென்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும்.

இந்திய கப்பல் கார்பரேசன் தனது எண்ணெய் கப்பல்களுக்கு பரம்வீர் சக்ரா பெற்ற தியாகிகளின் பெயர் சூட்டுவது வழக்கம்.அதே போல கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்களின் பெயரில் ஒரு எண்ணெய் கப்பல் உள்ளது.

இராஜஸ்தானில் அவரது சொந்த ஊரில் உள்ள விளையாட்டு அரங்கில் அவரது திருவுருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

ஜலந்தரில் ஒரு வீடுகட்டும் திட்டத்திற்கு பிருபுரம் என பிருசிங் அவர்களின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.