துல்லியமாக தாக்கும் நெடுந்தூர பீரங்கி குண்டுகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க திட்டம்

துல்லியமாக தாக்கும் நெடுந்தூர பீரங்கி குண்டுகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க திட்டம்

அதிக மக்கள் நெருக்கடியுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்திய இராணுவம் அதிநவீன எக்ஸ்காலிபர் குண்டுகளை வாங்க உள்ளது.நெடுந்தூரம் செல்லக்கூடிய இந்த குண்டுகள் ஜிபிஎஸ் உதவியுடன் இலக்கை துல்லியமாக தாக்கும்.50 கிமீ உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த குண்டு.

அவசரமாக வாங்கப்பட்டும் இந்த குண்டுகள் விரைவில் படையில் இணைக்கப்பட உள்ளது.அதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அவசரமாக பல ஏவுகணை மற்றும் குண்டுகள் வாங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டை பல்வேறு வகையில் பயன்படுத்த இயலும்.வானத்தில் செல்லும் போதே வெடித்தல், பங்கருக்குள் முதலில் ஊடுருவி பின் வெடித்தல் போன்றவை செய்யக்கூடியது.வெவ்வேறு வகையான fuse மாற்றுவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

இந்திய இராணுவம் அமெரிக்காவிடம் இருந்து M-777 அதிஎடைகுறை ஹௌவிட்சர்களை வாங்கி படையில் இணைக்க உள்ளது.இந்த குண்டை இந்த புதிய எம்-777 பீரங்கியில் வைத்து ஏவ முடியும்.

Leave a Reply

Your email address will not be published.