கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”.

கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”.
One Man Army என்ற வார்த்தை நாய்ப் சுபேதார் சஞ்சய் குமாருக்கு மட்டுமே பொருந்தும்.!!
March 3, 1976 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தின் கலோல் பக்கான் என்ற ஊரில் பிறந்த இவர், பெரும் முயற்சிக்குப்பின் இராணுவத்தில் இணைந்தார்.இராணுவத்தில் சேரும் முன், இவரின் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டது.
நான்காம் முறை வெற்றிகரமாக 13 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் இணைந்தார்.படையில் இணைவதற்கு முன் இவர் டாக்சி டிரைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
கார்கில் போர் தொடங்கியதும் Area Flat Top பகுதியை பாக்கிஸ்தான் இராணுவ வீரர்களின் பிடியில் இருந்து மீட்க 13 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மலை பகுதி செங்குத்தான பகுதியாக இருந்ததால் நமது வீரர்கள் எதிரியின் மெசின் கன் தாக்குதலுக்கு உள்ளானதால் மேலே முன்னேற முடியாமல் 150மீட்டருக்கு பின் தள்ளப்பட்டனர்.
அந்த சமயத்தில் 13 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படை பிரிவில் அடிப்படை பதவியான ரைபிள்மேன் ரேங்கில் இருந்த சஞ்சய், வீரத்துடன் முன்வந்து Area Flat Top பகுதியை மீட்க தனியாளாக கிளம்பினர்.ஏரியா பிளாட் டாப்பின் நிலை மற்றும் பிரச்சனையை புரிந்து கொண்ட நாயக் குமார் தனியாளாக மேலே தவழ்ந்து சென்று மேலே ஏறினார்.
சஞ்சய் குமார்  150 மீட்டர் உயரமுள்ள செங்குத்து பாறை மலையின் உச்சியில் அமைந்திருந்த பாக்கிஸ்தான் பங்கரை நோக்கி கயிற்றின் வழியே ஏறி சென்று மேலே சென்ற மறுகனமே எதிரிகள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் தொடர்ச்சியாக சராமாரி தாக்கினார். சஞ்சய் குமாரின் மார்பில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தன. இரத்தம் நீக்காமல் வழிந்தோடியது. எனினும் எதிரியை நோக்கி சுட்டபடியே பங்கரை நோக்கி சென்றார். நேருக்கு நேர் கை சண்டையில் ஈடுபட்டு மூன்று பாக்கிஸ்தான் வீரர்களை கொன்றுவிட்டு, எதிரியின் கனரக பல்சுழல் ஆட்டோமேட்டிக் இயந்திர துப்பாக்கியை கைப்பற்றினார். 
இத்தகைய ஆயுதத்தை எளிதாக அப்பகுதிக்கு எடுத்துச்செல்ல முடியாது. எனவே கிடைத்த அருமையான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு இரண்டாம் பங்கரை நோக்கி சென்றனர் சஞ்சய் குமார் படையினர்.
இரண்டாம் பங்கரை இரகசியமாக அணுகி, பாக்கிஸ்தான் வீரர்களை மிரளச்செய்தார் சஞ்சய் குமார். தப்பி ஓட முயன்ற பாக்கிஸ்தான் வீரர்களை சுட்டு வீழ்த்தி ஆயுதங்களை கைப்பற்றினார்.இதனால் நம்பிக்கையடைந்த மற்ற வீரர்களும் களத்தில் இறங்க சஞ்சய் குமார் Area Flat Top பகுதியை வெற்றிகரமாக மீட்டார்.
மீதம் இருந்த சில சிறிய பங்கர்களில் பாக்கிஸ்தான் வீரர்களை தேடி சென்று அவர்கள் தப்பி ஓட முயலும் நேரத்தில் வேட்டை ஆடி அருகில் இருந்த பகுதியையும் சஞ்சய் படையினர் மீட்டெடுத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சஞ்சய் குமார், ஆறு மாதங்களில் உடல் நலம் தேறி, இராணுவத்தில் தன் பணியை தொடங்கினர்.!!
சஞ்சய் குமாரின் இத்தகைய வீர செயலை பாராட்டும் விதத்தில், இந்திய முப்படைகளின் மிக உயரிய விருதான “பரம் வீர் சக்ரா” வழங்கப்பட்டது.
இன்று உயிரோடு உள்ள மூன்று பரம் வீர் சக்ரா வாங்கிய வீரர்களில் இவரும் ஒருவர்.
-இந்திய இராணுவச் செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published.