ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் அழகராஜா

ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் அழகராஜா

ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் 1999 கார்கில் போரில் ஈடுபட்டவர்.
அதன் பின் குரூப் கேப்டனாக படையில் இருந்து ஓய்வு பெற்றார்.கடந்த 2012ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.1999 கார்கில் போரின் போது சௌரிய சக்ரா விருது பெற்றவர்.

Squadron leader பெருமாள் அவர்களின் தந்தை தமிழகத்தின  இராஜபாளையத்தில் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.சிறுவயதிலேயே தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த பெருமாள் அவர்கள் கோவைக்கு அருகே உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் படித்து பின்பு  NDA-வில் பயிற்சி முடித்தார். flight school-ல் பயிற்சி முடித்த பின்  விமானப்படையின்  106 Recce ஸ்குவாட்ரானில் இணைந்தார்.பணியின் பெரும்பாலான வருடத்தில் அவர் அங்கே தான் பணியாற்றினார்.கான்பெரா விமானத்தில் பறக்க அனுபவம் பெற்ற வெகுசில மூத்த அதிகாரிகளுள் அவரும் ஒருவர்.

மே 21 கார்கில் போரின் போது Squadron Leader அழகராஜா பெருமாள் அவர்கள் எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்த படாலிக் செக்டார் மீது புகைப்பட உளவு பணிக்காக இரண்டாம் முறை பறந்த போது அவரது விமானத்தை பாகிஸ்தானியர் தாக்கினர்.பாக் வீரர்கள் ஸ்டிங்கர் ஏவுகணை கொண்டு தாக்கியதில் அவரது கான்பெரா விமானத்தின்
starboard engine-ஐ தாக்கியது.

ஆனால் பெருமாள் அவர்கள் மிகுந்த தைரியத்துடன் விமானத்தை கைவிடாமல் 45 நிமிடம் பறந்து ஸ்ரீநகர் திரும்பினார்.விமானப்படை வரலாற்றில் முதன் முறையாக ஏவுகணை தாக்கிய ஒரு விமானம் திரும்பி வந்தது அதுவே முதல் முறை.

ஏவுகணை அவரது விமானத்தின் இறக்கை பகுதியை தாக்கி வெடித்தது.அதன் பின் விமானம் குலுங்க தொடங்கியதும் தான் தாக்கப்பட்டத்தை உணர்ந்ததாக பின்பு பெருமாள் அவர்கள் கூறியுள்ளார்.அப்போது அங்கு combat Air Patrol-க்காக பறந்து கொண்டிருந்த நமது மிக்-29 விமானமும் இதை உறுதிப்படுத்தின.அவர் விமானத்தை விட்டு வெளியேற உத்தரவு பறந்தது.ஆனால் அவர் விமானத்தை தொடர்ந்து இயக்க தொடங்கினார்.விமானத்தின் அனைத்து முக்கிய parameter-களை சோதனை செய்த பிறகு அவருக்கு விமானத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.அவரது Instrument panel இல்லாததால் ஸ்ரீநகர் தளத்தில் பத்திரமாக தரையிறங்க மற்றுமொரு விமானம் உதவியது.கான்பெரா விமானத்தில் இருந்து வெளியே குதிப்பது மிக கடினம்.அந்த விமானத்தில் ejection seat கிடையாது.ஹேட்ச் வழியாக தான் பாரசூட் உதவியுடன் வெளியேற முடியும்.

கட்டுப்படுத்த முடியாத விமானத்தில் இதுபோல் குதிப்பது மிகுந்த சிரமம் என அவர் குறிப்பிட்டார்.

கார்கில் போரில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்கு அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

அமைதியாக உறங்குங்கள் சார்….

Leave a Reply

Your email address will not be published.