சுகாய் விமானத்தின் தாக்கும் திறனை அதிகரிக்க புதிய வான் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்

சுகாய் விமானத்தின் தாக்கும் திறனை அதிகரிக்க புதிய வான் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்

சுமார் 1500 கோடிகள் செலவில் இரஷ்யாவிடம் இருந்து வான்-வான் தாக்கும் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் போர் முறைக்காக சுகாய் விமானங்களுக்கு இந்த BVR ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இரஷ்யாவின்  R-27 air-to-air ஏவுகணைகள் இதற்கென வாங்கப்படுகின்றன.

எதிரி விமானங்களை நீண்ட தூரத்தில் இருந்து தாக்க இந்த ஏவுகணைகள் உதவும்.

R-27 ஒரு நடுத்தூரத்தில் இருந்து நீண்ட தூரம் வரை செல்லும் விமானம் ஆகும்.மிக் மற்றும் சுகாய் விமானங்களில் இருந்து ஏவ இந்த ஏவுகணைகளை இரஷ்யா மேம்படுத்தியுள்ளது.

கடந்த 50 நாட்களில் மட்டும் இந்திய விமானப்படை சுமார் 7600 கோடிகள் அளவுக்கு அவசரமான முறையில் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.