கார்கில் போரில் வீரத்துடன் போரிட்டு வீர் சக்ரா பெற்ற வீரர் – போக்குவரத்து காவலராக பணிபுரியும் கொடுமை

கார்கில் போரில் வீரத்துடன் போரிட்டு வீர் சக்ரா பெற்ற வீரர் – போக்குவரத்து காவலராக பணிபுரியும் கொடுமை

“நான் தவறான முடிவு எடுத்திருக்கலாம்.வீர் சக்ரா விருது எனக்கு எதும் கொடுக்கவில்லை.விருதுகள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயர்பதவி வழங்கப்படுகிறது.நான் கொன்ற பாகிஸ்தான் வீரர் பாகிஸ்தானிலேயே மிக உயர்ந்த இராணுவ விருது பெற்றுவிட்டார்.எதுவாயிருந்தாலும் கடவுள் என்னை உயிருடன் வைத்துள்ளார்.அவர் நல்லவர்” என சத்பால் சிங் அவர்கள் மனம்வருந்தி கூறுகிறார்.

பஞ்சாபின் சங்க்ரூர் மாவட்டத்தில் பவானிகர் என்ற சிறிய நகரத்தில் தற்போது போக்குவரத்து துறை காவலராக பணியாற்றுபவர் தான்
தலைமை காவலர் சத்பால் சிங்.ஆனால் அவரது சட்டையை உற்று பார்த்தால் தெரியும் அவர் ஒரு சாதாரண காவலர் அல்ல என்பது.அவரது சட்டையில் நான்கு வரிசைகளில்அமைந்த வண்ண ரிப்பன்களன காண முடியும்.அதில் ஒன்று பாதி ஊதா மற்றும் பாதி ஆரஞ்ச் வண்ணத்தில் மிளிர்வதை காணலாம்.ஆம்…வீர் சக்ரா ரிப்பன் தான்.

இருபது வருடத்திற்கு முன்பு சத்பால் சிங் அவர்கள் இந்திய இராணுவத்தின் செபாய் வீரராக டைகர் மலைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் பதில் தாக்குதலை முறியடித்தவர்.அந்த தாக்குதலில் அவர் பாக் இராணுவத்தின் கேப்டன் கர்னால் செர் கான் என்பவரையும் மேலும் மூன்று பாக் இராணுவத்தினரையும் வீழ்த்தினார்.இவர்கள் அனைவரும் பாக் இராணுவத்தின் வடக்குசார் இலகு காலட்படை பிரிவை சேர்ந்தவர்கள்.இதில் கேப்டன் செர் கானுக்கு பாக்கின் மிகஉயரிய இராணுவ விருதான நிசான் இ ஹைதர் விருதை அளித்தது பாக் இராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய பிரிகேடியர் ஒருவர் பாக் கேப்டன் செர் கான் அவர்களின் வீரத்தை பற்றி பாக்கிற்கு எழுதிய பிறகே இந்த விருதை கூட பாக் வழங்கியது.கேப்டன் செர் கான் டைகர் ஹில் பகுதியில் இந்திய படைகளுக்கு மிக சவாலாக விளங்கினார்.அவரை வீழ்த்தியது செபார் சத்பால் அவர்கள் தான்.

டைகர் ஹில் பகுதியை மீட்க களத்தில் நின்ற 19வது கிரானேடியர்களுக்கு உதவ சென்ற 8வது சீக் படையில் இருந்தவர் தான் செபாய் சத்பால் அவர்கள்

மூன்று ஜேசிஓகள்கள் உட்பட 18 வீரர்களை இழந்து இந்தியா பாகிஸ்தானியர்களை விரட்டியது.
மேஜர் உட்பட பல வீரர்கள் படுகாயமைந்திருந்தனர்.

ஜீலை 5,1999 மாலை சண்யைிட வேண்டிய இடத்தை அடைந்த போது மிக கடுமையான குளிராக இருந்தது.அப்போது நாங்கள் அணிந்திருந்த உடைகள் தவிர வேறு துணிகள் எங்களிடம் இல்லை.ஒன்று நாங்கள் மேலதிக துணிகளை எடுத்த வேண்டும் அல்லது மேலதிக வெடிபொருள்கள்.எதை எடுத்து செல்ல வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே என தன் நினைவுகளை கூறுகிறார் சத்பால் அவர்கள்

முதல் தாக்குதலை பாக் படைகள் ஜீலை 7 அன்று ஆரம்பித்து இந்திய படைகளை பின்னோக்கி தள்ளின.நாங்கள் ஒரு பாக் குழுவை முறியடித்தால் மீண்டும் அடுத்த குழு தாக்கும்.பாக் குழுவை ஒரு திறமை மிக்க அதிகாரி வழிநடத்தினார்.காயமடைந்த அதிகாரிகள் மற்றும் ஜேசிஓக்களுடன் சுபேதான் நிர்மல் சிங் பிரைகேடியர் பஜ்வா அவர்களுடன் வயர்லெஸ் தொடர்பிலிருந்தார்.

சுபேதார் நேரடியான குண்டு காயம் தலையில் பட்டு இறப்பதற்கு முன்பு  ‘Bole So Nihal Sat Sri Akal’ என்ற போர்க்குரலை கூறிக்கொண்டு அதிகாரி தலைமையில் எதிரிகளை முன்னேறி தாக்க உத்தரவிட்டிருந்தார்.எனக்கு நான்கு குண்டடி பட்டது.நான் எனது இலகுரக இயந்திர துப்பாக்கிை எடுத்து சுடத் தொடங்கினேன்.கொஞ்ச நேரத்திலயே கையால் சண்டையிட தொடங்கினோம்.நான் பாக் துருப்புகளை வழிநடத்திய நல்ல உயரமான ட்ராக் சூட் அணிந்திருந்த வீரர் மீது பாய்ந்து தாக்கினேன்.அங்கு பெருங்கூச்சலும் குழப்பமும் நீடிக்க நான் அவரை கொன்றேன்” என சத்பார் அவர்கள் நினைவு கூர்கிறார்.

 நான் கொன்றது கேப்டன் சேர் கான் என்பது எனக்கு அப்போது தெரியாது.அவர்கள் நான்கு பேரை நான் கொன்றேன்.”கேப்டன்,அவரது ரேடியோ ஆபரேட்டர் அவருக்கு குறைதூர பாதுகாப்பு வழங்கிய இரு வீரர்கள்”..பாக் கேப்டனின் இறப்பு பாக் இராணுவத்திற்கு பேரிடியாக இருந்தது.கேப்டன் சேர் கான் மீண்டும் மீண்டும் வீரர்களை வழிநடத்தி சுடுவதும் மறைவதும் முறையை பயன்படுத்தி எங்களை தாக்கினார்.அவர் நன்றாக சண்டையிட்டார் என கூறுகிறார் சத்பால் அவர்கள்.

சத்பால் அவர்களின் முன்னாள் பிரைகேடியர் கூறுகையில் ” நான் சத்பால் அவர்களுக்கு பரம்வீர் சக்ரா வழங்க பரிந்துரை செய்தேன்.ஆனால் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது”

2009ல் படையில் இருந்து ஓய்வு பெற்று பஞசாப் காவல் துறையில் இணைந்தார் சத்பால் அவர்கள்.வீர் சக்ராவிற்காக எனக்கு எந்த வெயிட்டேஜும் வழங்கவில்லை.முன்னாள் இராணுவ வீரர்கள் கோட்டாவில் பணியில் இணைந்தேன்.தற்போது நான் ஹெட் கான்ஸ்டபிளாக உள்ளேன் என கூறுகிறார்.

தற்போது எனது மகனும் PG படித்துவிட்டு வேளையில்லாமல் உள்ளார்.

தற்போது இந்த விசயம் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களின் காதுகளை எட்ட துணை ஆய்வாளராக பணிஉயர்வு வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.