தென் கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட இரஷ்யா! நடந்தது என்ன ?

தென் கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட இரஷ்யா! நடந்தது என்ன ?

தென்கொரிய வான் பகுதிக்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாகவே நுழைந்ததாக இரஷ்யா மன்னிப்பு கேட்டுள்ளது

இதற்கு முன் தென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய விமானப்படை விமானம்,      துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தது தென் கொரிய விமானப்படை

நேற்று காலை சீன விமானப்படையின் குண்டு வீசும் விமானங்களும் ரஷ்ய விமானப்படையின் குண்டு வீசும் விமானங்களும் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் சேர்ந்து ரோந்து சென்றன, ரஷ்யாவும் சீனாவும் தென் சீனக்கடலில் சேர்ந்து ரோந்து செல்லுவது இதுவே முதன் முறை. தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவே ரஷ்யாவும் சேர்ந்து ரோந்து சென்றது,

ஆனால் ரோந்து சென்றதில் வழிகாட்டும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு விமானம் தென் கொரிய வான் பரப்புக்குள் சென்று விட்டது, உடனடியாக தென் கொரிய விமானப்படை தனது போர் விமானங்களை செலுத்தி ஊடுருவி வந்த ரஷ்ய விமானத்தை நோக்கி எச்சரிக்கைக்காக சுட்டது, மொத்தம் 300 குண்டுகள் F 16 விமானத்திலிருந்து சுடப்பட்டது, விமானத்தை எச்சரிக்கை செய்வதர்க்காகவே சுட்டதாக தென் கொரிய அரசு அறிவித்தது.

ரஷ்யாவிடம் இது குறித்து கேட்டபோது, கொரிய வான் எல்லைக்குள் பறந்தது குறித்து விசாரணை செய்யப்படும் என்று ரஷ்ய விமானப்படை அறிவித்துள்ளது.

தற்போது தங்களது எ-40 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தவறுதலாக  நுழைந்துள்ளதாக கூறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.