இராணுவத்தில் இணைந்த ரைபிள்மேன் அவுரங்கசீப் அவர்களின் சகோதரர்கள்
பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ரைபிள்மேன் அவுரங்கசீப் அவர்களின் சகோதரர்கள் தற்போது இந்திய இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
ஈத் திருநாளை கொண்டாட தனது சொந்த ஊருக்கு சென்ற ரைபிள்மேன் அவுரங்கசீப் அவர்களை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.தற்போது அவரின் இரு சகோதரர்கள் முகமது சபீர் மற்றும் முகமது தாரிக் இருவரும் இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
தற்போது பயிற்சி பெற்று வரும் இருவரும் விரைவில் பஞ்சாப் ரெஜிமென்டில் இணைவர்.