ரபேலும்,சுகாயும் போதும் மொத்த எதிரிகளை வீழ்த்த- விமானப்படை துணை தளபதி பதாரியா

ரபேலும்,சுகாயும் போதும் மொத்த எதிரிகளை வீழ்த்த- விமானப்படை துணை தளபதி பதாரியா

இனி விரைவில் சுகோய் 30எம்கேஐ விமானமும் ரபேல் விமானமும் இணைந்து செயல்பட உள்ளது.இந்த ஒரு விமானங்களின் இணைகள் போதும் சீனா பாகிஸ்தான் உள்ளிட்டு நம் மொத்த எதிரிகளையும் வீழ்த்த என துணை தளபதி கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் எந்த எதிரியும் இவ்விணை குறித்து பயம் கொள்வான் எனவும் கூறியுள்ளார்.பிப்ரவரி 27 போன்று பாகிஸ்தான் மீண்டும் பதில் தாக்குதல் நடத்தினால் என்னவாகும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேரிடும் எனவும் ரபேல் அந்த சமயம் நமது படையில் இருந்தால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஏனெனில் ரபேல் மட்டும் சுகோய் உதவியுடன் பல்வேறு ரக ஆயுதங்களை ஏவி எதிரிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.
 
தற்போது விமானப்படை மேலதிக 18 விமானங்களையும் 21 மிக் 29 விமானங்களையும் வாங்க உள்ளது.விமானப்படை தற்போது 272 சுகாய் மற்றும் 69 MiG-29 UPG விமானங்களையும் இயக்கி வருகிறது.

42 ஸ்குவாட்ரான்கள் தேவையாக உள்ள நிலையில் தற்போது 31 ஸ்குவாட்ரான்கள் தான் செயல்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.