இன்னும் பயத்தில் உறைந்துள்ள பாகிஸ்தான்- இந்திய போர்விமானங்களை வெளியேற்றாதவரை வான் பரப்பை திறக்க மாட்டோம் என அடம்பிடிப்பு
இந்தியா முன்னனி விமான தள நிலைகளில் இருந்து போர்விமானங்களை வெளியேற்றாதவரை பாகிஸ்தானின் வான் பரப்பை திறக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாக் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானுக்குள் இந்திய போர்விமானங்கள் நுழைந்து பாலக்கோட் போன்ற இலக்குகள் மீது குண்டுமழை பொழிந்தன.இதன் பிறகு இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் அன்று முதல் பாக் வான் பகுதியை மூடியது பாகிஸ்தான்.இன்று வரை பாகிஸ்தானின் வான்பகுதி திறக்கப்படவே இல்லை.
இந்த தடையால் கிட்டத்தட்ட 100மில்லியன் டாலர்கள் வரை பாகிஸ்தானுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல பயனாளர்கள் பாதிக்கப்பட்டாலும் இந்தியா இது குறித்து கூறுகையில் இது முழுதும் பாகிஸ்தானின் முடிவு.எங்களுக்கு தேவையில்லை என கூறிவிட்டது.
ஆனால் ஆப்கனில் இருந்து இந்தியாவிற்கு தினமும் பயணம் செய்யும் பயணர்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.