கார்கிலில் இந்திய வீரர்கள் போரிட்ட கடினமான போர்- டோலோலிங் மீட்பு

கார்கிலில் இந்திய வீரர்கள் போரிட்ட கடினமான போர்- டோலோலிங்  மீட்பு

திராஸ் பகுதியில் இருந்த இந்திய வீரர்கள் ரேடியோ செய்திகளை வழிமறித்து கேட்டுகொண்டிருந்தர்.பாகிஸ்தான் இராணுவத்தின் செய்திகள் வழிமறிக்கப்பட்டுகொண்டிருந்தன.பாகிஸ்தான் இராணுவமும் ,தீவிரவாதி முஜாகிதீன்கும் இந்திய இராணுவத்தை திட்டுவதும் அவர்களது போர்முழக்கத்தை உரக்க கத்துவதுமாய் இருந்தது வழிமறிக்கப்பட்டு கேட்கப்பட்டது.

ஜீன் 13,அதிகாலை 4.10மணி. 2வது இராஜபுதன ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி எம்.பி. ரவீந்திரநாத் ,20கிமீ தூரத்தில் நிலை கொண்டிருந்த 8வது மலைப் பிரிவின் கமாண்டர் மேஜர் ஜெனரல் மொகிந்தர் பூரியை ரேடியோவில் அழைத்தார்.அது ஒரு சிறிய உரையாடல் ,மிகச் சிறியது “சார் நான் டோலோலிங்கின் மேல் உள்ளோம்”.

அவர் கூறிய சில நிமிடங்களுக்கு முன்னால் தான் அவரது படைப் பிரிவு திராஸ் செக்டாரில் உள்ள மிக முக்கிய மலைமுகட்டை இரவு முழுதும் நீண்ட, கொடூர ,கையாலயே போர் நடத்தி திரும்ப கைப்பற்றியிருந்தனர்.ஒரு இராணுவ அதிகாரி,இரு ஜேசிஓ வீரர்கள் மற்றும் ஏழு வீரர்கள் அவருக்கு முன்னால் வீரமரணம் அடைந்து கிடந்தனர்.மலைப் பகுதி 80டிகிரி சாய்வாக இருந்தது.

அடுத்த நாள்,தனது டென்டுக்குள் ரவீந்தரநாத் இதற்காக தனது படை இழந்த வீரர்களை நினைத்து கதறி அழுது கொண்டிருந்தார்.ஆனால் இந்த படை நடவடிக்கையின் வெற்றி மொத்த கார்கில் போரையும் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றியது.இதை மீட்க தான் மேஜர் இராஜேஷ் சிங் அதிகாரி,மேஜர் விவேக் குப்தா மற்றும் லெப் கலோனல் விஸ்வநாதன் ஆகியோர் தனது இன்னுயிரை இழந்திருந்தனர்.மேலும் போரில் நாம் இழந்த மொத்த வீரர்களில் பாதி பேர் இதை மீட்க தனது இன்னுயிரை ஈந்திருந்தனர்.

திராஸ் செக்டாரில் இருந்த உயர்ந்த மலைப் பகுதியில் ஊடுருவி இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் விரப்பட்டு 510கிமீ நீளமுள்ள ஸ்ரீநகர்-கார்கில்-லே சாலை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
“Tololing being bang on the road, it choked our throats,” என ஒரு பீல்டு கமாண்டர் கூறினார்.”அந்த அழுத்தம் தற்போது இல்லை” எனவும் கூறினார்.

இந்த வீரதீர நடவடிக்கைக்காக ரவீந்தரநாத் மற்றும் அவரது படைப் பிரிவை இராணுவ தலைமை தளமதி மாலிக் நேரடியாக பாராட்டினார்.டோலோலிங் மீட்பு மூலம், அடுத்த ஆறே நாளில் அதை சுற்றி இருந்த நான்கு நிலைகளை வீரர்கள் கைப்பற்றினர். Point 4590, Rocky Knob, Hump மற்றும் Point 5140 ஆகிய மலைகள் கைப்பற்றப்பட்டன.

போரின் வீரங்கள்

“இது தற்கொலை நடவடிக்கை”

டோலோலிங் கைப்பற்றலின் முதல் பகுதியில் நமது கமாண்டர்கள் எதிரியின் நிலையை தவறாக கணித்துவிட்டனர்.திராஸ் செக்டாரில் மே 14, ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக 18வது கிரேனாடியர் பட்டாலியன் அனுப்பப்பட்டது.பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடத்தி ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட வேண்டும் என்பது உத்தரவு.

அப்படியாக முதல் நடவடிக்கையின் போது கார்கிலில் நிலைகொண்டிருந்த 121வது பிரிகேடின் கமாண்டர் ,கிரேனாடியர் கமாண்டிங் அதிகாரியை அழைத்து ” மேலே 8-10 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.மேலே சென்று அவர்கள் கழுத்தை பிடித்து இழுத்து வா” என சாதாரண தொனியில் தைரியமாக கூறினார்.இதன் மூலம் நமது படைகளுக்கு உண்மை நிலவரம் தெரியாமல் இருந்தது புலனாகிறது.

நமது படைகள் மேலே கைப்பற்ற செல்வதும் திரும்புவதுமாய் இருந்தன.நாகா,கார்வால் மற்றும் கிரேனியர்களின் மூன்று பட்டாலியன்கள் டோலோலிங் மேலே இரு வழி வழியாக செல்ல முயன்றனர்.தொடர்ந்து வந்த துப்பாக்கி சூடுக்கு மத்தியிலும் சிறிது வெற்றியும் பெற்றனர்.மே 22 கிரேனாடியர்கள் தங்கள் நடவடிக்கையை தொடங்கிய போது அது இரத்தம்தோய்ந்த நடவடிக்கையாக இருந்தது.அப்போது தான் சமவெளியில் இருந்த கமாண்டர்கள் தாங்கள் எதை எதிர்கொள்கிறோம் என்பதை உணர்ந்தனர்.

மலைப் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மறைவிடமும் இல்லை.பாக் இராணுவம் ஊடுருவி மலைப் பகுதியில் நன்கு இரும்புகளை கொண்டு பங்கர்களை ஏற்படுத்திவிட்டது.ஒரு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே அவற்றை ஆக்கிரமிப்பாளர்களால் தடுக்க முடிந்தது.ஒரு முறை கிட்டத்தட்ட டோலோலிங்கின் மலைமுகட்டு கீழே இரு பிளாட்டூன் கிரேனாடியர் வீரர்கள் முன்னேறவும் முடியாமல் கீழிறங்கவும் முடியாமல் 16 நாட்களுக்கு முடங்கினர்.அந்த அளவுக்கு பாக் படைகள் மேலிருந்து நமது படைகளின் முன்னேற்றத்தை பாரத்து இயந்திர துப்பாக்கி,ஆர்டில்லரிகள் கொண்டு நிறுத்தின.

மோசமான வானிலை மற்றும் நிலவில்லாத இரவில் மட்டுமே மேலே முன்னேறுவது சாத்தியப்பட்டது.வெப்பநிலை கிட்டத்தட்ட -5 முதல் -11வரை.எலும்பை துளைக்கும் குளிர்.ஒரு நல்ல தேர்ந்த வீரருக்கு 16,000அடி உயரத்தை எட்ட 11மணி நேரம் பிடித்தது.

மெதுவாக இன்ச் இன்சாக ஊர்ந்தே செங்குத்தான மலை மேல் ஏறினாலும் மலை முகட்டை கடந்து மேலே ஏறும் போது பாக் பங்கர்களில் இருந்த வீரர்களால் எளிதாக நமது வீரர்களை சுட முடிந்தது.மிக கடினமான பணியாக இருந்த இது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமமான நடவடிக்கை தான் என ஒரு மேஜர் நினைவு கூறுகிறார்.

வீரர்கள் ஆயுதம்,தோட்டாக்கள்,உணவு என கிட்டத்தட்ட 25 கிலோ பொருளை சுமந்து செங்குத்தாக ஏறவேண்டி இருந்தது.கடினத்துடன் தவழ்ந்து செல்லும் ஐந்து அடிகளுக்குள் குளிரும்,ஏற்றமும் ,அந்த உயரத்தில் மூச்சுத் திணறலும்,மேலிருந்து கீழே உள்ள நமது வீரர்கள் மீது பாக் படை குண்டு மழையும் , அந்த ஐந்து அடியை நரகமாக மாற்றியது.

“நீங்கள் சுமக்கும் ஒவ்வொரு கிராமும் ,அதிகபட்ட பட்ச எடையே” என கேப்டன் அஜித் சிங் ,16 கிரானேடியர் கூறுகிறார்.டோலோலிங்கிற்கு யுத்தத்தை முதலில் வழிநடத்திய வீரர்களுள் ஒருவர்.”உணவா அல்லது அதிகபட்ச ஆயுதமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” அதாவது 2கிலோ உணவா அல்லது 100 தோட்டாக்களா?கேப்டன் அஜித் மற்றும் அவரது வீரர்கள் தோட்டக்களை தேர்ந்தெடுத்தனர்.மூன்று நாட்களுக்க அந்த படை வெறும் சிகரெட்டை புகைத்தே உயிர்வாழ்ந்தது.

ஒரு நாளுக்கு பிறகு மேஜர் ராஜேஸ் சிங் அதிகாரி தலைமையில் ஒரு கம்பெனி கிரானேடியர் வீரர்கள் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.இலக்கை கிட்டத்தட்ட 15மீ நெருங்கிவிட்டனர்.கையால் தாக்குதல் நடத்தினர்.
இதில் மேஜர் அதிகாரி மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.பாக் வீரர்கள் பங்கரில் இருந்து இயந்திர துப்பாக்கியால் சுட 30மீ வீரர்கள் பின்னடைந்தனர்.அதன் பின் மெல்ல மெல்ல பின்னடைந்தனர்.இதன் காரணமாக 23 வயதே ஆன கேப்டன் சச்சின் நிம்பல்கர் மற்றும் அவரது வீரர்கள் மலை முகட்டின் பின்புறம் பெரிய பாறைக்கு தள்ளப்பட்டனர்.அவர்கள் அங்கயே மூன்று நாட்கள் தாக்குபிடித்தனர்.15,000அடி உயரம்.தாக்குதல் நடத்த ஒரு கிரேனேடு கூட இல்லை.வெளியிலும் வர முடியாது.எங்கும் போக முடியாது.

பின்பு அங்கிருந்தே ஒரு பாறை பிளவு வழியாக ஒரு க்ருப் கடக் கமாண்டோ வீரர்களோடு சென்றார்.அவரால் எதிரியை பார்க்க முடிந்தது.எதிரியாலும் பார்க்க முடிந்தது.அதில் ஒருவன் கேப்டன் நிம்பல்கரிடம் “மேல வாங்க சார்! எங்களிடம் ஆயதம் இல்லை.உங்கள் அதிகாரியின் உடலை எடுத்து செல்லுங்கள் ” என கூறினார்.மேஜர் அதிகாரியின் உடல் அங்கு கிடந்தது.அதற்கு பதிலடி கொடுத்த கேப்டன் நிம்பல்கர் ” வருவேன்! உன்னுடைய உடலையும் சேர்த்து எடுக்க நான் வருவேன் ” என கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு பின்னர் அந்த பங்கர் அழிக்கப்பட்டு மேஜர் அதிகாரியின் உடல் மீட்கப்பட்டது.கேப்டனின் பெருங்கோபம் தனிந்தது.

பதிலடி

“சார் , டோலோலிங்கில் உங்களை சந்திக்கிறேன்”

ஜீன் 2 இரவு, கிரானேடியர்கள் தனது நான்காவது மற்றும் கடைசி தாக்குதலை டோலோலிங்கில் நடத்தினர்.முடிவு இல்லை.போதும் எல்லாம் போதும் ,ஒவ்வொரு முறையும் வீரர்களை இழக்க முடியாது.செய் அல்லது செத்துமடி என மலை மீது நன்கு கட்டமைக்கப்பட்வ பங்கரில் இருந்து நமது வீரர்களை அழிக்கும் அந்த முஜாகிதீன் பயங்கரவாதிகள் மற்றும் பாக் வீரர்களை இனி ஆர்டில்லரி கொண்டு தாக்கி அழிக்க முடிவுசெய்யப்பட்டது.டோலோலிங்கில் நமது வீரர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையின் போது அதனருகே அமைந்திருந்த மலையை ஆக்கிரமித்தவர்களும் தெரிந்து தாக்குதலை நடத்தினர்.

அடுத்த ஒன்பதே நாட்களுக்குள் 8க்கும் அதிகமான பேட்டரி ஆர்டில்லரிகள் கொண்டுவரப்பட்டது.ஒவ்வொரு பேட்டரியிலும் ஆறு போபர்ஸ் மற்றும் நடுத்தர வகை ஆர்டில்லரிகள் இருக்கும்.புத்துணர்வுடன் புதிய திட்டங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டது.தற்போது டோலோலிங்கை கைப்பற்ற இரண்டாவது இராஜபுதன ரைபிள்ஸ் வரவழைக்கப்பட்டது.மலைப் பகுதியில் பின்தங்கியிருந்த 18வது கிரேனாடியர்கள் வீரர்களை அங்கயே அந்த இடங்களை பிடித்துவைக்க உத்தரவிடப்பட்டது.புதிதாய் வரும் இராஜபுதன வீரர்களுக்கு சுடுதளமாக ( Fire Base) விளங்க தயாரானார்கள்.எதிரியின் நிலையில் இருந்து 300மீ கீழே கிரேனாடியர்கள் வீரர்கள் மூன்று இடங்களில் இருந்த மலைமுகடு தளத்தில் இருந்து தாக்குதல் நடத்த தயாரானார்கள்.

இதுவரை இந்த தாக்குதல் நடவடிக்கையில் கிரேனாடியர்கள் பெற்ற அனைத்து படிப்பினை அனுபவங்களையும் இராஜபுதன வீரர்கள் கேட்டறிந்துகொண்டனர்.12 ஜீனில் நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் இராஜபுதன வீரர்கள் பக்கத்தில் இருந்த மலைமுகடு தளத்தில் போலியான பயிற்சிகளை மேற்கொண்டனர்.டோலோலிங்கின் மீது ஒரு வாரம் பல கோணங்களில் இருந்து நடத்திய உளவின் அடிப்படையில் மண்ணில் கோடுகளை வரைந்தும் கற்களை கொண்டு இலக்குகளாய் பாவித்தும் தங்கள் திட்டங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டன.வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கிரேனேடுகளை வீசி சோதனை பயற்சி செய்த போது அதில் பல கிரேனேடுகள் வெடிக்கவே இல்லை.இது அதிர்ச்சியை தான் ஏற்படுததியது.பல நாட்களாக சேமித்து வைத்த ஆயுதங்கள் இப்படி தான் ஆகும் என இராணுவம் பின்னாளில் கூறியது.அதிகப்படியான வெடிபொருள்கள் ( தோட்டாக்கள் ,கிரேனேடுகள் போன்றவை) டோலோலங்கிற்கு கீழே உள்ள செங்குத்து பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.பட்டாலியனில் உள்ள சமையல்காரர்,முடிதிருத்துபவர்,துணிதுவைப்பர் என அனைவரும் வீரர்களும் உதவினர்.ஒரு வீரருக்கு உதவ நான்கு பேர் தேவைப்பட்டனர்.” தாக்க தயாராக உள்ளோம்” என 23 வயதே ஆன லெப் பர்வின் தோமர் கூறினார்.அவர் படையில் இணைந்து வெறும் ஐந்து மாதங்கள் தான் ஆகியிருந்தது.அவரை அவரது பட்டாலியன் வீரர்கள் ” பட்டாலியனின் குழந்தை” என்று தான் அழைப்பார்களாம்.

தாக்குதல் நடத்த தயாராக 90 தன்னார்வலர் வீரர்கள் கலோனல் ரவீந்தர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்களுள் சில பட்டாலியனின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அத்லெட் வீரர்கள்.” அவர்கள் என்னிடம் ,அமைதிகாலத்தில் மட்டுமல்ல , எங்களால் போரிலும் சிறப்பாக செயல்பட முடியும்.அதை நாங்கள் நிரூபிக்க விரும்புகிறோம்”என ரவீந்தர் நினைவு கூறுகிறார்.அனைத்து வீரர்களும் 11 ஜீன் அன்று கடிதம் எழுதி தங்களது நண்பர்களிடம் தருகின்றனர்.திரும்பிவராவிட்டால் அந்த கடிதங்கள் வீடுகளுக்கு செல்லும்.

ஜீன் 12, இரவு 8மணி இராஜபுதன வீரர்கள் இலக்குக்கு 300மீ கீழே பெரிய கற்பாறைகளுக்கு பின்னால் நின்று போரிட தயாரானார்கள்.அவர்கள் தாக்குதலுக்கு செல்லும் முன்பே கலோனல் ரவீந்தர் சிறிய உரையை நிகழ்ந்துகிறார்.” நீங்கள் என்னிடம் கேட்ட அனைத்தையும் உங்களுக்கு கொடுத்துவிட்டேன்.இனி எனக்கு வேண்டியதை நீங்கள் எனக்கு தர வேண்டும்” என கூறிமுடிக்கிறார்.
வீரர்கள் உற்சாகத்துடன் இருந்தனர்.ஜேசிஓ பன்வெர் சிங் குறுக்கிட்டு ” சார் காலை டோலோலிங் மேலே வாருங்கள்.நாம் சந்திக்கலாம்” என வீரத்துடன் கூறினார்.

பார்பாட் பங்கர்

“இது தீபாவளி போல உள்ளது”

முன்னால் இருந்து தாக்குதல் நடத்துவதே ஒரு வழி.ஆனால் முன்னதை போலல்லாமல் இந்த முறைவீரர்கள் திட்டத்தோடு தயாராக இருந்தனர்.தாக்குலுக்கு நான்கு மணி நேரத்திற்கு முன்புவரை 120 ஆர்டில்லரி துப்பாக்கிகள் இடைவிடாது டோலோலிங்க் மலையை தாக்கினர்.10,000 ஷெல்கள்,50,000 டிஎன்டி, புதுடெல்லியின் முக்கால் வாசி இடங்களை அழிக்க போதுமான அளவு வெடிபொருள்கள் கொண்டு தாக்கப்பட்டது.” இது பார்ப்பதற்கு தீபாவளி போன்று உள்ளது.இது போல நாங்கள் பார்த்ததே இல்லை” என ராஜபுதன அதிகாரி ஒருவர் நினைவு கூர்கிறார்.டோலோலிங்கின் முகட்டின் ஒரு வழி பலமாக தாக்கப்பட்டது.இதை நமது வீரரகள் “பார்பாடு பங்கர்” என அழைத்தனர்.

இதே போல மற்றுமொரு குழு தாக்குதலுக்கு தயாராக இருந்தது.அபிமன்யு,பீம்,அர்ஜீன் என பெயரிடப்பட்ட சிறிய குழுக்களாக வீரர்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தனர்.கேப்டன் விஜந்த் தலைமையில் அவர்கள் ஏறிகொண்டிருந்தனர்.அப்போது தனது வீரர்களை உற்சாகமேற்ற அவரது வாக்மேனில் பார்டர் ஹிந்தி படத்தின் பாடல்களை ஒலிக்கச் செய்தார்.

ஆர்டில்லரி நிறுத்தப்பட்டவுடன் தாக்கும் குழு வேகமாக முன்னேறி தாக்குதலை நடத்தியது.ஒரு குழு நேரடியாக பங்கரை நோக்கியும் , மற்றொரு குழு சுற்றி முகட்டின் பின்புற அடிவாரம் சென்று எதிரியின் பின்வாங்களை தடுத்தது.அங்கு ஏற்கனவே இருந்த ஒரு பிளாட்டூன் கிரானேடியர் வீரர்கள் தாக்குதல் நடத்திய வீரர்களை மற்ற பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கா வண்ணம் மறைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஆர்டில்லடியால் ஏற்பட்ட குழிகளின் உதவியால் இன்ச் இன்ச்சாக அந்த மலைச் சரிவை அடைந்தனர்.நடுஇரவாகி விட்டது.பாக் இயந்திர துப்பாக்கி இடைவிடாது முழங்க சிறிது சிறிதாக வீரர்கள் முன்னேறினர்.

இப்போது தான் மேஜர் குப்தா தலைமையில் ரிசர்வ் பிளாட்டுன் தாக்குதலை பின்பக்கமாக தொடங்கி மலை முகட்டை நெருங்கியது.ஆக்கிரமிப்பாளர்களுடன் நடைபெற்ற கைகலப்பு யுத்தத்தில் மேஜர் குப்தா மற்றும் அவரின் ஆறு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.கீழே கலோனல் ரவீந்தர்நாத் அவர்களை காலை மேலே சந்திப்போம் என கூறிய ஜேசிஓ பன்வெர் சிங் அவர்களும் அதில் ஒருவர்.ஆனால் அவர்கள் அதை செய்து முடித்திருந்தனர்.ஆம் டோலோலிங்க் கைப்பற்றப்பட்டது.

டோலோலிங் கைகளில் விழுந்ததும் அருகில் இருந்த மலைப்பகுதிகளும் கைப்பற்றப்பட்டன.ஜீன் 13 காலை இராஜபுதன ரைபிள்ஸ் பார்பாடு பங்கரை கைப்பற்றியது. Point 4590 கைகளில் விழுந்தது.ஜீன் 14 அன்று  Hump பகுதி கிரேனாடியர்களால் கைப்பற்றப்பற்றது.அடுத்த மூன்று நாட்களில் அருகில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டது.

அந்த போர்களம் முழுதிலும் 50 பாக்வீரர்கள் உடல் சிதறி கிடந்தது.அவர்கள் பாக் இராணுவத்தின் வடக்குபிராந்திய லைட் இன்பான்ட்ரியை சேர்ந்தவர்கள்.

அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்ட போது அவர்கள் நீண்ட கால போருக்கு தயாராக இருந்தது தெளிவாகியது.நெய்,பாட்டிலில் அடைக்கப்பட்ட பைன்ஆப்பிள்,வெண்ணெய்,தேன் ஆகியவை இருந்தன.அன்று மேலே -10டிகிரி குளிர்.பசியால் துடித்திருந்த நமது வீரர்கள் அந்த உணவுகளை எடுத்துக் கொண்டனர்.அடுத்த நாள் காலை தேனில் மூழ்கிய வெண்ணெய் உணவாக எடுத்துக் கொண்டனர்.” நாங்கள் அதை ஆனந்தமாக எடுத்துக்கொண்டாம்” என மேஜர் சந்தீப் பஜாஜ் கூறினார்.

இவ்வாறாக கார்கில் போரின் முக்கிய போர் முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published.