500கிமீ பிரம்மோஸ் தயார்-பிரம்மோஸ் நிறுவன சிஇஓ சுதிர் குமார்
மாற்றியமைக்கப்பட்டு தூரம் கூட்டப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயாராக இருப்பதாக பிரம்மோஸ் நிறுவன சிஇஓ சுதிர் குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்தியா MTCR எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடு கூட்டத்தில் இணைந்த பிறகு இந்த சாதனை சாத்தியப்பட்டுள்ளது.தூர்தர்சன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
மேலும் இந்தியா பிரம்மோசின் vertical deep dive வகையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் கன்வென்சனல் போர் முறைக்கு ஒரு புதிய பரிமாண்த்தையே பிரம்மோஸ் தோற்றுவித்துள்ளது.
தற்போது 500கிமீ வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை தயாராக உள்ளதாக சுதிர் குமார் கூறியுள்ளார்.
விமானத்தில் இருந்து உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையை பொருத்தி வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது.இந்த திறமையை பெறும் உலகின் முதல் நாடு என்ற பெயரும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.