சந்திராயன் 2 எதற்காக ?
சந்திராயன் 2 இன்று ஜீலை 22 திங்கள் அன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
Geosynchronous Satellite Launch Vehicle எனப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவு வாகனம் மூலம் சந்திராயன் 2 திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு ரோவருடன் கூடிய மித எடை தரையிறங்கு வாகனத்தை சுமந்து ஜீலை 22 ,2019 அன்று பிற்பகல் 2.43 க்கு ஜிஎஸ்எல்வி வாகனம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.100 கோடி மக்களின் கனவை சுமந்து ஒட்டு மொத்த இந்தியர்களையும் பெருமைப் படச் செய்த இந்த திட்டம் ஒரு மாபெரும் சாதனை தான்.
சந்திராயன் 2 திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நிலவை ஆராய்வதே.
மிதஎடை வாகனம் மூலம் ஒரு ரோவர் வாகனத்தை நிலவின் தரைப் பகுதியில் தரையிறக்கி சோதனை செய்வதும் திட்டத்தின் ஒரு பகுதி.இவை தவிர நிலவின் தரைப் பகுதி குறித்த ஆய்வு, தாதுப்பொருள்கள், நிலவின் புற அடுக்கு மண்டலம் மற்றும் தண்ணீர் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
விண்கலம் மற்றும் துணை அமைப்புகள்
சந்திராயன் 2 ஆர்பிட்டர் ஒரு பாக்ஸ் வடிவ வாகனம் ஆகும்.அதன் எடை 2379 கிகி மற்றும் அதன் சூரிய தகர வரிசைகள் 1000வாட் சக்தியை உருவாக்க வல்லது.இந்த ஆர்பிட்டர் தரையிறங்கு வாகனம் மற்றும் இந்திய வான் ஆய்வு வலையமைப்பை தொடர்பு கொள்ள உதவும்.இந்த ஆர்பிட்டரில் ” ஒரு பார்க்க கூடிய நிலப்பரப்பை படமிடும் திறனுள்ள காமிரா ” மற்றும் ஒரு நடுநிலை நிறை ஸ்பெக்டோமீட்டர் , ஒரு synthetic aperture radar, ஒரு near infrared spectrometer, ஒரு radio occultation experiment, ஒரு soft X-ray spectrometer மற்றும் solar X-ray monitor ஆகியவை கொண்டிருக்கும்.
விக்ரம் எனப் பெயரிடப்பட்ட லேண்டர் எனப்படும் மிதஎடை வாகனம் 1471கிகி எடை உடையது.இது 650 வாட் சூரிய ஆற்றலை உருவாக்க வல்லது.இந்த விக்ரம் லேண்டர் நேரடியாக இந்திய வான் வலையமைப்பு ( Indian Deep Space Network) மற்றும் ரோவர் வாகனத்தை தொடர்பு கொள்ள வல்லது.இந்த விக்ரம் லேண்டரில் ஒரு காமிரா , ஒரு சீஸ்மோமீட்டர் ( நில அதிர்வு போன்ற தரை அதிர்வுகளை கண்காணிப்பது), ஒரு thermal profile, Langmuir probe, மற்றும் ஒரு நாசா தயாரிப்பு laser retroreflector ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிரக்யான் எனப்படும் ஆறு சக்கர ரோவர் வாகனம் உள்ளது.27கிகி எடையுடைய இந்த வாகனம் 50 வாட் சோலார் பவரில் இயங்க கூடியது.ஒரு நொடிக்கு ஒரு செமீ என்ற வேகத்தில் இந்த ரோவர் இயங்க கூடியது.இந்த ரோவர் நேரடியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும்.இந்த பிரக்யான் ரோவரில் காமிரா, ஆல்பா-புரோட்டான் எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டர் மற்றும் laser-induced ablation spectroscopy experiment ஆகியவை உள்ளன.
ஜிஎஸ்எல்வி பாய்ந்து பூமியின் வெளிப்புறம் நோக்கி பாய்ந்து ட்ரான்ஸ் லூனார் இன்ஜெக்சனின் போது லேண்டர்-ஆர்பிட்டர் இணை முதல் நீள்வட்ட (170 x 40400 km altitude) பாதையை அடையும்.இந்த இணை ஆகஸ்டு 5 அல்லது 6ல் நிலவின் முதல் நீள்வட்ட ஆர்பிட்டை அடையும்.ஆர்பிட்டை அடைந்த உடன் விக்ரம் லேண்டரும் ஆர்பிட்டரும் பிரியும்.ஆர்பிட்டர் 100கிமீ உயரத்தில் நிலவை சுற்ற லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தின் ஒரு உயரமான பகுதியில் இறங்கும். ஆர்பிட்டர் 1 வருடம் இயங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.லேண்டர் நிலவின் தரையை அடைந்ததும் ஒரு சரிவு மேடை வழியாக ரோவர் களமிறக்கப்படும்.
கிட்டத்தட்ட 3800கிகி எடையுடைய அமைப்புகளை ஜிஎஸ்எல்வி மார்க் 3 சுமந்து சென்றுள்ளது.இது இஸ்ரோவின் மணிமகுடத்தில் மற்றுமொரு வெற்றிச் சிறகு ஆகும்.
இனி 4000கிகி எடையுடைய அமைப்புகளை நாமே ஏவலாம்.வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியமல்ல.
மேலும் ஒரு ஹாலிவுட் படத்தை தயாரிக்க ஆகும் செலவை விட குறைந்த செலவிலேயே இந்த சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தி வருகிறது.
சந்திராயன் ,மங்கள்யான் , சந்திராயன் 2 என பல வண்ணச் சிறகுகளை தன் மகுடத்தில் பதித்து இஸ்ரோ ஒரு அழகிய பறவையாக இந்திய மக்கள் மனதில் பதிந்துள்ளது.
@ செல்வா