ஈரானை மிரட்டும் வகையில் 2வது போர்க்கப்பலை அனுப்பியது இங்கிலாந்து

ஈரானை மிரட்டும் வகையில் 2வது போர்க்கப்பலை அனுப்பியது இங்கிலாந்து

ஈரானை மிரட்டும் விதமாக பெர்சிய வளைகுடாவிற்கு 2வது போர்க்கப்பலை இங்கிலாந்து அனுப்பியுள்ளது.
சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற சூப்பர்டேங்கர் கிரேஸ் என்ற ஈரானிய எண்ணெய் கப்பலை இங்கிலாந்து சிறைபிடித்தது. அந்த கப்பலை விடுவிக்காவிட்டால் உரிய பதிலடியை கொடுக்கப் போவதாக இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ஹர்முஸ் ஜலசந்தியில் தங்கள் நாட்டுக் கப்பல்களை ஈரான் தாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி, ஏற்கனவே எச் எம் எஸ் டங்கன் என்ற போர் கப்பலை பாதுகாப்புக்காக இங்கிலாந்து நிறுத்தியது.
இந்நிலையில் எச் எம் எஸ் மாண்ட்ரோஸ் என்ற மற்றொரு போர்க் கப்பலையும் இங்கிலாந்து அனுப்பியுள்ளதால் பெர்சிய வளைகுடாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.