உள்நாட்டிலேயே 170 விமானங்கள் தயாரிக்க ரூ1.5 லட்சம் கோடியில் திட்டம்

இந்திய விமானப்படைக்கு 170 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாகும்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் விமானப்படைக்கு போர் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு இப்போது முழுவீச்சில் செயல்வடிவம் கொடுக்க விமானப்படையினர் களமிறங்கியுள்ளனர்.
59 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 ரபேல் விமானங்களுடன் 16 தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களும் இந்தியாவின் விமானப் படையில் இணைக்கப்பட்டாலும் அவை எண்ணிக்கையளவில் போதுமானதாக இல்லை என்பதால் உள்நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 56 டாட்டா ஏர் பஸ் திட்டம் இந்த ஆண்டில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 114 போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிப்பது குறித்த பரிந்துரைகள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.