Day: July 13, 2019

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும் – இந்தியா எச்சரிக்கை

July 13, 2019

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் தண்டனையாக அமையும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார். கார்கில் போர் வெற்றியின் 20ஆவது ஆண்டை குறிக்கும் வகையில்,  டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார். தீவிரவாதிகள் மூலமும், ஊடுருவல்கள் மூலமாகவும், மறைமுகப் போர்கள் மூலமும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது குருட்டு சாகசங்களில் இறங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம், இத்தகைய குருட்டு […]

Read More

இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவலா?

July 13, 2019

ஜம்மு-காஷ்மீர் பகுதியில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாக வெளியான தகவல் தவறு என ராணுவத்தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் டெம்சோக் ((Demchok)) என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தியாவின் லடாக்கையும் சீனாவின் திபெத்தையும் இணைக்கும் பகுதியில் டெம்சோக் அமைந்துள்ளது. கடந்த ஜூலை 6ஆம் தேதி, தலாய் லாமாவின் 84ஆவது பிறந்தநாளின்போது, டெம்சோக் பகுதியில் சிலர் திபெத் கொடியை உயர்த்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சீனப் பகுதியில் இருந்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவின் […]

Read More

ரபேல் போர் விமானம் ’அற்புதம்’ – இந்திய விமானப்படை வீரர்கள்

July 13, 2019

ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கி பார்த்து அற்புதமாக இருந்தது என்று கூறியதாக பிரான்ஸ் விமானப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார்கருடா என்றழைக்கப்படும் இந்தியா – பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டில் உள்ள மாண்ட் டி மார்சன் நகரில், கடந்த 1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இருநாட்டு விமானப் படைகளுக்கும் சொந்தமான 27 போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த பயிற்சி முகாமில்  300 வீரர்கள் பங்கேற்று […]

Read More

மியான்மர் நாட்டுக்கு அதிநவீன டோர்பிடோக்களை ஏற்றமதி செய்யும் இந்தியா

July 13, 2019

மியான்மர் நாட்டுக்கு அதிநவீன டோர்பிடோக்களை ஏற்றமதி செய்யும் இந்தியா மியான்மர் நாட்டுக்கு அதிநவீன இலகுரக டோர்பிடோக்களை இந்தியா முதன் முறையாக ஏற்றுமதி செய்துள்ளது.ஸ்யெனா எனப்படும் இந்த டோர்டோக்கள் வாங்க இதற்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2017ல் கையெழுத்தாகியது.அதாவது கடந்த 2017ல்  $37.9 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பாரத் டைனமிக் லிமிடெட் இந்த டோர்பிடோக்களை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

Read More

“ஸ்பை”யுடன் நெருக்கம் – ரகசியத்தை பகிர்ந்த இராணுவ வீரர் – இந்திய ராணுவம் செய்த அதிரடி..!

July 13, 2019

பாகிஸ்தானிற்கு உளவுப் பார்த்த பெண்ணிற்கு அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை பகிர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்ள, தங்களை பெண்கள் என்று காட்டிக்கொண்டு பாகிஸ்தான் உளவாளிகள் வலம் வருவதாக இந்திய ராணுவம் ஏற்கனவே எச்சரித்தது. மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் பதவி, பெயர், அடையாளம் உள்ளிட்ட எந்த தகவலையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல் ராணுவ சீருடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று […]

Read More

ஈரானை மிரட்டும் வகையில் 2வது போர்க்கப்பலை அனுப்பியது இங்கிலாந்து

July 13, 2019

ஈரானை மிரட்டும் வகையில் 2வது போர்க்கப்பலை அனுப்பியது இங்கிலாந்து ஈரானை மிரட்டும் விதமாக பெர்சிய வளைகுடாவிற்கு 2வது போர்க்கப்பலை இங்கிலாந்து அனுப்பியுள்ளது. சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற சூப்பர்டேங்கர் கிரேஸ் என்ற ஈரானிய எண்ணெய் கப்பலை இங்கிலாந்து சிறைபிடித்தது. அந்த கப்பலை விடுவிக்காவிட்டால் உரிய பதிலடியை கொடுக்கப் போவதாக இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ஹர்முஸ் ஜலசந்தியில் தங்கள் நாட்டுக் கப்பல்களை ஈரான் தாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி, ஏற்கனவே எச் எம் எஸ் டங்கன் […]

Read More

மும்பைத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என ஹபீஸ் சையத் மறுப்பு

July 13, 2019

மும்பைத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என ஹபீஸ் சையத் மறுப்பு மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையத் தெரிவித்துள்ளார். தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் தொடர்ந்த வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக […]

Read More