P75I நீர்மூழ்கி திட்டம்-முன்னேற்றம்
கடலுக்கடியில் இருந்தே எதிரியின் படையை தாக்கி அழிக்கும் 6 அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பிராஜக்ட் 75ஐ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி, 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளிநாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. கடந்த 2007ம் ஆண்டிலேயே பாதுகாப்பு அமைச்சகம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் தற்போது புத்துயிர் பெறுகிறது.
இன்னும் ஓராண்டில் இத்திட்டம் தொடங்கும் என்றும், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நிறைவேறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.