இந்தியாவுக்கு ஆயுதம் தாங்கி டிரோன் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு ஆயுதம் தாங்கி டிரோன் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

ஆயுதம் தாங்கி ஆளில்லாத விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து ஆயுதத்தைத் தாங்கிச் செல்லக்கூடிய ஆளில்லாத டிரோன் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அதிபர் டிரம்ப் ஒப்புதல்அளித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப உதவிகளை இந்தியாவுக்கு வழங்க தயார் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 வான் பாதுகாப்பு தொழில் நுட்பத்தை பெறும் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தால், இந்தியாவுக்கு அதி நவீன எப்.35 போர் விமானங்களைத் தரத் தயார் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.