புதிய கடலோர காவல் படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழர்! யார் இவர் ?

இந்திய ஆயதப்படைகளில் நான்காவதான கடலோர காவல்படையின் மேற்கு கடற்கரை பகுதியின் தளபதியாக இருந்த ஏ.டி.ஜி. கிருஷ்னசாமி நடராஜன் தமிழகத்தை சார்ந்தவர்.

இவருடைய மனைவி திருமதி. ஜெயந்தி நடராஜன், மகள் டாக்டர் திருமதி.கீர்த்திகா, மருமகன் டாக்டர். சூரிய பிரகாஷ் மற்றும் மகன் திரு. நீரஜ் பொறியியல் பயின்று வருகிறார்.

இவருடைய 31வருட பணிக்காலத்தில் கரையிலும் , கடலிலும் பல்வேறு கட்டளையக பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டவர். இந்திய கடலோர காவல்படையின் அனைத்து வகை கப்பல்களிலும் பணியாற்றி வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.

நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல் ஐ.சி.ஜி.எஸ். சங்ராம் ,
ஆழ்கடல் ரோந்து கப்பல் ஐ.சி.ஜி.எஸ். வீரா , அதிவேக கப்பல் ஐ.சி.ஜி.எஸ். கனகலதா பருவா ,
கடலோர ரோந்து கப்பல் ஐ.சி.ஜி.எஸ். சந்த்பிபி
ஆகிய கப்பல்களை வழிநடத்தியவர்.

மேலும் கடலோர காவல்படை மாவட்டம் (எண்-5) தமிழ்நாடு மற்றும்
மண்டபம் கடலோர காவல்படை தளம் ஆகியவற்றின் கட்டளை அதிகாரியாகவும், தில்லியில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தில் முதன்மை இயக்குனராகவும்(கொள்கைகள் மற்றும் திட்டவரைவுகள்) ,
கடலோர காவல்படையின் படைகள் தேர்வு வாரியத்தின் (COAST GUARD SSB) தலைவராகவும் ,
முதன்மை இயக்குநர் (திட்டங்கள்),
இணை இயக்குனர் (நடவடிக்கைகள்) ,
கடலோர காவல்படை தளபதியின் ஆலோசகராகவும்,
கிழக்கு பகுதி கடலோர காவல்படை தலைமையகத்தில் தலைமை அதிகாரியாகவும் (வீரர்கள் மற்றும் நிர்வாகம்),
கொச்சியில் உள்ள கடலோர காவல்படை பயிற்சி மையத்தின் கட்டளை அதிகாரியாகவும்,
அந்தமான் மற்றும் நிகோபார் பகுதி கடலோர காவல்படை பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் ஊட்டி வெலிங்டன் ராணுவ கல்லூரியிலும் , அமேரிக்க கடலோர காவல்படை மையத்தில் தேடுதல் மற்றும் மீட்பு , கடல்சார் பாதுகாப்பு மற்றும் துறைமுக நடவடிக்கைகள் ஆகியற்றில் பயிற்சி முடித்து நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் கடலோர காவல்படையை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் அந்த கோர சம்பவத்திற்கு பின் கடலோர காவல்படையின் தளவாடங்களை நவீனபடுத்துதல் மற்றும் அதிகரித்தல் ஆகியவற்றை திறம்பட செய்து முடித்தவர்.

மேலும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தை நிர்மாணம் செய்வதற்கான முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றியும் கண்டார்  இந்த பயிற்சி மையம் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அழிக்கல் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது இங்கிருந்து 36கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்திய கடற்படை மையத்தில் தான் கடற்படை அதிகாரிகளுடன் கடலோர காவல்படை அதிகாரிகளும் பயிற்சி பெறுகிறார்கள் இவருடைய முயற்சியால் எதிர்காலத்தில் கடலோர காவல்படை மையத்தில் வருங்கால கடலோர காவல்படை அதிகாரிகள் பயிற்சி பெறுவர் .

இவர் ஜனாதிபதியின் கடலோர காவல்படை விருதையும் (PTM- President’s Tatrakshak Medal), கடலோர காவல்படை விருதையும் (TM- Tatrakshak Medal) ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் பல உயர்வுகளை வாழ்க்கையிலும் ,பணியிலும் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழர்கள் பலர் இந்திய ஆயுதப்படைகள் மற்றும் துணை ராணுவப்படைகளில் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
இன்னும் பலரை அவ்வாறு காண விரும்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.