சென்னையில் பயிற்சி மையம் அமைக்க இந்திய ராணுவ தளபதி ஒப்புதல்

ராணுவ வீரர்களை ராணுவ அதிகாரிகளாக பணி உயர்வு செய்வதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு இந்திய ராணுவ தளபதி விபின் ராவத் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் தலைவர்களுக்கான பயிற்சி பிரிவு (young leaders training wing) என்ற பெயரில் இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி 200 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
5 மாதங்கள் நடக்கவிருக்கும் இந்த பயிற்சியில் தகவல் பரிமாற்றம், தலைமைத்துவம் உள்ளிட்டவை குறித்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதனை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ராணுவ அதிகாரிகள் இதில் வீரர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.