உலகம் முழுவதும் சர்வதேச யோகாதினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், சர்வதேச யோகாதினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று மாலை யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ராஜஸ்தான் பகுதி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.