நீர்மூழ்கி கப்பலில் இருப்பவர்களை மீட்கும் டி.எஸ்.ஆர்.வி வாகனம்

நீருக்கு அடியில் விபத்துக்குள்ளாகும் நீர்மூழ்கிக் கப்பல்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்கான நீர் மூழ்கி வாகனம், விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

DSRV என்று அழைக்கப்படும் அந்த வாகனம், அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய சில நாடுகளின் கடற்படைகளில் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டில் இந்த வாகனமானது இந்தியக் கடற்படையிலும் இணைக்கப்பட்டது. ஒரு வாகனத்தின் விலை ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். DSRV வாகனமானது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடலில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இது கடலுக்கு அடியில் 650 மீட்டர் ஆழம் வரை சென்று ஒரே நேரத்தில் 14 பேரை மீட்டு கொண்டு வரும் திறன் மிக்கது.

Polimer 

Leave a Reply

Your email address will not be published.