மகனை நினைத்து பெருமை கொள்கிறேன்-வீரரின் அப்பா உருக்கம்
அருணாச்சல் அஸ்ஸாம் எல்லை அருகே நடைபெற்ற உல்பா பயங்கரவாதிகளுடனான சண்டையில் 17 பாரா பீல்டு ரெஜிமென்டை சேர்ந்த 25 வயதே ஆன பாரா வீரர் அமித் சதுர்வேதி வீரமரணம் அடைந்தார்.
அவருக்கு இன்று பிறந்த நாள் கொண்டாட வேண்டிய நிலையில் மூவர்ண கொடி போர்த்தப்பட்டு வீரமரணம் அடைந்து வீட்டிற்கு வந்தார்.தன் பிறந்த நாளுக்கு வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தார்.அவர் கூறியபடியே வீட்டிற்கும் வந்தார் , மூவர்ண கொடி உடலில் போர்த்தியிருக்க…
நான் என் மகனை நினைத்து பெருமை கொள்கிறேன் என அவரது பெற்றோர் பெருமையோடு கூறியுள்ளனர்.பெற்ற மகனை இளவயதிலேயே நாட்டிற்காக அற்பணித்துள்ளனர் இந்த பெற்றோர்.
கடந்த 2014ல் தான் இராணுவத்தில் இணைந்த அமித் இராணுவத்தின் 17வது பாரா பீல்டு ரெஜிமென்டில் பணியாற்றினார்.
கடந்த ஏப்ரலில் வீட்டுற்கு வந்துள்ளார்.அப்போது அவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.தன் பிறந்தநாளுக்கு வருவதாகவும் அப்போது தனது நண்பர்களுக்கு பெரிய அளவிலான ட்ரீட் வைப்பதாகவும் கூறியுள்ளார்.
அவரது உடலில் மூவர்ண கொடி போத்தியிருக்க அவரது கிராமமான ககரோல் கண்ணீரில் மூழ்கியுள்ளது.அவரது அப்பா ராம்வீர் அவர்களும் இராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியவர்.அவரது மேலும் இரு மகன்களான அருண் மற்றும் சுமித் இருவரும் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.