மேஜர் பத்மபனி ஆச்சாரியா

இரண்டாவது உயரிய இராணுவ விருது பெற்ற மேஜர் பத்மபனி ஆச்சாரியா
ஜீன் 21, 1969ல் மேஜர் பத்மபனி தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் வசித்துவரும் ஒடிஷாவை சொந்த மண்ணாகக் கொண்ட ஒரு இந்திய இராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். சாருலதா என்பவரை மணமுடித்தார்.
ஆச்சாரியாவின் தந்தை ஜகநாத் ஆச்சாரியா 1965 முதல்1971வரை பாக் குடனான போரில் சிறப்பாக பணியாற்றி ஒய்வுபெற்ற இந்திய வான்படையின் விங் கமாண்டர் ஆவார்.
அவர் தற்போது ஹைதராபாத்திலுள்ள பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார்.பத்மபனிஆச்சாரியாவிற்கு  அபராஜிதா என்ற மகளும் உள்ளார். மேஜர் மரணடைந்து சில மாதங்கள் கழித்து அபராஜிதா பிறந்தார்.
ஆச்சாரியாவின் சகோதரர் பத்மசம்பவ் 1999ல் இந்திய இராணுவத்தில் கேப்டனாக இருந்தவர் மற்றும் காரகில் போரின் போது  வாஜி நடவடிக்கையில் அவரின் பங்கு மகத்தானது.
அவரின் தாய், விமளா ஆச்சாரியா, ஒரு சமூக செயல்பாட்டாளர். ஒரு முறை ஆச்சாரியாவை பற்றி நினைவு கூறும்போது அவர் மகிழ்ச்சியான நபர் என்றும் புத்தக வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.
சரியாக அவரின் பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு பின் ஜின் 28, 1999ல் இந்திய இராணுவத்தின் 2வது இராஜபுதன ரைஃபிள்ஸ் க்கு டோலாலிங் உச்சியில் உள்ள பாக் இராணுவத்தின் பங்க்கர்களை கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதை கைப்பற்றுவதில்தான் அவர்களின் வெற்றியே இருந்தது.
கார்கில் போரில் டோலாலிங் முற்றுகை மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது.
டோலோலிங்கில் பாகிஸ்தானியர்கள் தங்கள் நிலையை நன்கு கட்டமைத்திருந்தனர்.கண்ணிவெடி,இயந்திர துப்பாக்கி மற்றும் ஆர்டில்லரி கொண்டு தங்கள் நிலையை வலுப்படுத்தியிருந்தனர்.இதை கைப்பற்றுவதிலே தான் நமது வீரர்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது.ஏனெனில் அது ஸ்ரீநகர்-லே சாலையில் இருந்தது.
தன் உயிரை துட்சமென நினைத்து தனது படைக்கு தலைமைதாங்கி தனது வீரர்களுடன் டோலோலிங்கை கைப்பற்ற சென்றார்.அவர்கள் சோர்வுரும்போது ஊக்கமளித்து எதிரி நிலைகளை தாக்க செய்தார்.முதல் அலையில் நம் படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
தனது உயிரை துச்சமென நினைத்து ரிசர்வ் வீரர்களை அழைத்து கடும் குண்டு மழைக்கு இடையே மீண்டும் கைப்பற்ற சென்றார்.மீண்டும் இழப்பு.பல வீரர்களுக்கு காயம்.எஞ்சிய வீரர்களை கொண்டு தாக்கினார்.தரையில் ஊர்ந்தவாறே சென்று பங்கரை அடைந்தார்.ஒரு கிரேனேடை எடுத்து பங்கருக்குள் வீசி தாக்கினார்.இதில் அவர் படுகாயம் அடைந்தார்.அவரால் நகரமுடியவில்லை.படுகாயம் அடைந்திருந்தார்.படுத்த இடத்திலேயே எதிரிகள் மீது தாக்குதல் நடத்துகிறேன்.என்னை இங்கயே விட்டுவிட்டு எனது துப்பாக்கி சூடை பயன்படுத்தி எதிரிகளை தாக்குங்கள் என தனது எஞ்சிய வீரர்களுக்கு உத்தரவிட்டார்.இரவு முழுவதும் நீண்ட இந்த கடும் யுத்தத்தில் கடைசியாக நமது வீரர்கள் டோலாலிங்கை கைப்பற்றினர்.போரில் ஏற்பட்ட காயம் காரணமாக மேஜர் அங்கேயே  வீரமரணம் அடைந்தார்.
இந்த கைப்பற்றல் கார்கில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வீரதீர செயலுக்காக  இந்திய அரசு அவருக்கு இராணுவத்தின் இரண்டாம் உயரிய விருதான மகா வீர் சக்ரா விருதை வழங்கி கௌரவித்தது. அவர் வீரமரணம் அடைந்த போது அவர் மனைவி கர்பிணி.சில மாதங்களுக்கு பிறகு அபராஜிதா என்ற பெண் மகவை பெற்றெடுத்தார்.
டோலாலிங் தாக்குதல் நிகழ்வானது LOC Kargil  என்ற ஹந்தி திரைப்படத்தில் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.